ஓட்டு எனும் விதை!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஓட்டு எனும் விதை!

Added : நவ 19, 2021 | கருத்துகள் (4)
Share
ஓட்டு எனும் விதை!முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மழை நீர் வடியாமல் உள்ளதற்கு நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியது தான் காரணம் என்று கூற முடியாது. கட்டடங்கள் கட்டுவதற்கு சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது...' இப்படி புத்திசாலித்தனமாகப் பேசியிருப்பது, வீட்டுவசதித் துறை அமைச்சர்


ஓட்டு எனும் விதை!முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மழை நீர் வடியாமல் உள்ளதற்கு நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியது தான் காரணம் என்று கூற முடியாது. கட்டடங்கள் கட்டுவதற்கு சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது...' இப்படி புத்திசாலித்தனமாகப் பேசியிருப்பது, வீட்டுவசதித் துறை அமைச்சர்
முத்துசாமி.அதாவது அவருடைய கருத்துப்படி பார்த்தால், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் அமைத்தது குற்றமில்லையாம்; அந்த நீர்நிலைகளில் தண்ணீர் புகுந்தது தான் தவறாம்.இதை படித்தவுடன், தெய்வப்பிறவி படத்தின் காமெடி நினைவுக்கு வந்தது.அதில் தங்கவேலு உபன்யாசகர்; ராமாராவ் ஜோசியர். தங்கவேலு, 'நீர், ஒரு குழந்தையோட காதுகுத்துக்கு நாள் குறிச்சுத் தந்தீரே... என்னாச்சுத் தெரியுமா? எவனோ கடுக்கனோட சேர்த்து காதையும் அறுத்துண்டு போய்ட்டான்' என்பார்.அதற்கு ராமாராவ், 'அவன் ஏன் கடுக்கனை காதுல போடுறான்? காதுல போட்டதனாலத் தானே அறுத்துண்டு போனான்' என்பார்.அந்த காமெடிக்கும், நம் அமைச்சருக்கு எவ்வளவு ஒற்றுமை பாருங்கள். சினிமாவில் பார்த்து வயிறு குலுங்க சிரித்தோம்; அமைச்சரின் பேச்சைக் கேட்டு அழுகிறோம்.போகிற போக்கைப் பார்த்தால், தண்ணீர் மீது கூட வழக்குத் தொடுப்பர் போல... இப்படிப்பட்டோர் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது யாரை நொந்து என்ன?
கடந்த 2015-ல் ஏற்பட்ட அனுபவம் நமக்கும், அரசுக்கும் இன்னும் பாடம் கற்றுத் தரவில்லையே!சட்டத்தை வளைக்க, லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்று, நீர்நிலையில் கட்டடம் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்படுவது கண்கூடு.ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் லஞ்சம் பெற்று அனுமதி கொடுத்து விட்டனர்; ஆனால், மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பது நாம் தானே!'நல்ல நல்ல நிலம் பார்த்து, நாமும் விதை விதைக்கணும்...' என்று எம்.ஜி.ஆர்., பாடல் ஒன்று இருக்கிறது. அதைப்போல, நம் ஓட்டு எனும் விதையையும் தக்க முறையில் பயன்படுத்த வேண்டும்.
இல்லையேல், இந்த மாதிரி துக்ளக், 23-ம் புலிகேசி போன்றோரின் ஆட்சியில் தான் சிக்கி கொள்ள வேண்டும்.


லஞ்ச 'கலை' இடம் மாறும்!சி.ஆர்.குப்புசாமி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை மாநகராட்சியில், ஒரே நாளில் அரசு அதிகாரிகள் 18 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை காரணமாக, அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனராம்.
இதில் நமக்கு புரியாத விஷயம் ஒன்று உள்ளது...கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை, முதலில் தனிமைப்படுத்த வேண்டும்; பின், நோய் தாக்கத்தை வலுவிழக்கச் செய்வதற்கான சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டும்.இவை இரண்டையும் செய்யாமல், அந்த நோயாளியை வேறு இடத்துக்கு மாற்றுவதால் என்ன நடக்கும்? அங்குள்ள மக்களுக்கு நோயை பரப்புவர்.அதே போல தான் முறைகேடு செய்த அதிகாரியை, பணியிட மாற்றம் செய்யும் போது, அங்கும் தன், 'வேலை'யை தொடர்ந்து செய்வார்.இன்னும் சொல்வதென்றால், புதிதாக செல் லும் இடத்தில் இருக்கும் நேர்மையான அதிகாரிகளையும், ஊழல்வாதிகளாக மாற்றுவார்.லஞ்சம் வாங்கும், 'கலை'யை ஓரிடத்தில் இருந்து, இன்னோர் இடத்திற்கு மாற்றுவதற்கு பெயர் தான்,
பணியிட மாற்றம்!பணியிட மாற்றம் செய்வதால் அந்த நபர், திருந்தி விடுவாரா? அவரிடம் இருந்து நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?இந்த நாட்டில் லஞ்சமும், ஊழலும், முறைகேடும் தொய்வின்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செழித்து வளர்ந்து வருவதற்கான முதல்
காரணம், அரசு அதிகாரிகள் தான்.தவறு செய்யும் அதிகாரியை பணியிட மாற்றம் செய்வதோடு, அரசு முழு திருப்தி அடைந்து விடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பதை, அரசு கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.முறைகேடில் ஈடுபடும் அதிகாரி மீது உடனடியாக உயர்ந்தப்பட்ச தண்டனை வழங்கவும், அவரின் சொத்து அனைத்தும் பறிமுதல் செய்யவும், சட்ட முன்வடிவை உருவாக்கி, அமல்படுத்த வேண்டும்.ஊழியர்களுக்கு நன்றியும், பாராட்டும்!க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கன மழையால், சென்னை மாநகரே வெள்ளக்காடானது.முதல்வர் ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, ஆய்வு நடத்தினார்; மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும், மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, 'தி.மு.க., அரசு மழை நீர் வடிகால் துார் வார முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான், தண்ணீரில் சென்னை மிதக்க காரணம்' என்று குற்றம் சாட்டினார்.அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'கடந்த 10 ஆண்டுகள் நடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், திட்ட பணிகள் முறையாக செய்யவில்லை; முறைகேடு நடந்துள்ளது; விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும்' என்றார்.
மழை வெள்ளத்தில் சென்னை மிதக்க காரணம், கடந்த அ.தி.மு.க., ஆட்சியா, தற்போதைய தி.மு.க., அரசா என்ற விவாதம் களைகட்டியுள்ளது. சமூக வலைதளங்களில் இரு தரப்பும் கடுமையான மோதிக் கொள்கின்றன.இதற்கிடையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உள்ளிட்டோர், மழை பாதிப்புகளை பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி
வருகின்றனர்.எப்படியாவது அ.தி.மு.க.,வைக் கைப்பற்ற வேண்டும் என நினைக்கும் சசிகலாவும், 'மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைந்து சரி செய்ய வேண்டும்' என அறிக்கை வெளியிட்டுள்ளார்.காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பா.ம.க., உள்ளிட்ட கட்சினர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டுகொள்ளவில்லை.இந்த அரசியல் கட்சியினரை விட, நாம் பாராட்ட வேண்டியது மாநகராட்சி, மின்சாரம், பொதுப் பணித் துறை ஊழியர்களை தான். அவர்கள், இந்த இக்கட்டான நிலையிலும்
தங்கள் கடமையை அர்பணிப்புடன் செய்தனர்.அவர்களுக்கு நன்றியும், பாராட்டும்!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X