வறட்சி, வெடிப்பு கவலையில்லை... உதடுகள் உதிக்கட்டும் புன்னகை!

Added : நவ 19, 2021
Share
Advertisement
கார்த்திகை பிறந்தாச்சு. இனி மார்கழி, தை என பனிக்காலம்தான். குளிர் காலத்தில் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்னை, உதடு வெடிப்பு.உதட்டில், முடி, வியர்வை சுரப்பி போன்ற பாதுகாப்பு படலங்கள் இல்லை. இதனால், வறட்சி, வெடிப்பு போன்றவை இந்த காலத்தில் வாட்டி எடுக்கும்.குளிர் பாதிப்புகளிலிருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்க எளிமையான இயற்கை வழிகள்:தேங்காய் எண்ணெய்அனைத்து சரும

கார்த்திகை பிறந்தாச்சு. இனி மார்கழி, தை என பனிக்காலம்தான். குளிர் காலத்தில் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்னை, உதடு வெடிப்பு.உதட்டில், முடி, வியர்வை சுரப்பி போன்ற பாதுகாப்பு படலங்கள் இல்லை. இதனால், வறட்சி, வெடிப்பு போன்றவை இந்த காலத்தில் வாட்டி எடுக்கும்.குளிர் பாதிப்புகளிலிருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்க எளிமையான இயற்கை வழிகள்:தேங்காய் எண்ணெய்அனைத்து சரும பிரச்னைக்கும் சிறந்த தீர்வை தேங்காய் எண்ணெய் அளிக்கும். தேங்காய் எண்ணெயை தினமும் இருமுறை உதடுகளில் தடவி, சில நொடிகள் மசாஜ் செய்யவும்.இது, வறண்ட உதடுகளுக்கு ஈரப்பதத்தை சேர்க்கிறது. தேங்காய் எண்ணெயிலிருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள், உதடுகளை மென்மையாக்க தேவையான எண்ணெயை தருகிறது.
தனியாகவும் மற்ற இயற்கை எண்ணெயுடன் கலந்தும், தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.தேன்இயற்கை மாய்ஸ்ச்சுரைசரான தேன், வறண்ட மற்றும் வெடித்த உதடுகளுக்கு சிகிச்சையளிக்க ஏற்றது. உதடுகளில் ஏற்படும் வெடிப்பு, புண்களை சீக்கிரம் குணப்படுத்தும். தேனிலிருக்கும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வெடித்த உதடுகளில், தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. தேனை நேரடியாகவோ, கிளிசரின் அல்லது வாஸ்லினுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.கற்றாழைகொஞ்சம் கசப்பான சுவை கொண்டதாக இருந்தாலும், நீங்கள் விரும்பும் பளபளப்பான உதடுகளை கற்றாழை ஜெல் அளிக்கும். கற்றாழை இலையிலிருந்து ஜெல்லை அகற்றி காற்று புகாத கொள்கலனில் சேமித்து பயன்படுத்த வேண்டும். கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் கழுவலாம். உதட்டில் பயன்படுத்தும் முன்னர், உங்கள் முழங்கையில் சிறிது கற்றாழை ஜெல்லை தடவி, அலர்ஜி பாதிப்பு ஏற்படுகிறதா என சோதித்துக்கொள்ளவும்.வெள்ளரிக்காய்நீர்ச்சத்து அதிகமுள்ள வெள்ளரிக்காய், உதடுகளிலிருக்கும் வறட்சியை நீக்கி தேவையான விட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. வெள்ளரிக்காய் துண்டை, உதடுகளில் மெதுவாக ஓரிரு நிமிடங்கள் தேய்க்கவும். பத்து நிமிடங்கள் சாறு உதட்டிலிருக்கும் படி விட்டு பின்னர், கழுவவும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்யலாம்.
இதன்மூலம், உதட்டில் எப்போதும் ஈரப்பசை இருக்கும்.நீரேற்றமாக இருங்கள்!எந்த சீசனிலும், உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிப்பது முக்கியம். சருமம் மற்றும் உதடுகள் வறண்டு போவதற்கு முக்கிய காரணம் நீரிழப்புதான். நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது, எந்த லிப் பாமும், இயற்கை வைத்தியமும் உதடு வெடிப்பிற்கு பயனளிக்காது. ஆரோக்கியமான உதடுகளுக்கு, வயது, உடல் எடைக்கேற்ப தேவையான அளவு நீரை நாள்முழுவதும் எடுத்துக்கொள்வதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X