செய்தி செய்தி

தமிழ்நாடு

2ம் போக நெல் சாகுபடிக்கு ஆயத்தம்! மானிய திட்டம் அறிவிக்க வேண்டுகோள்

Added : நவ 19, 2021
Share
Advertisement
ஆனைமலை: ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், முதல் போக நெல் அறுவடை முடிந்த பகுதிகளில், இரண்டாம் போக சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு வழங்கப்படும் நீரை பயன்படுத்தி, ஆனைமலை ஒன்றியத்தில் இரண்டு போக நெல் சாகுபடி நடக்கிறது. கடந்த மே, மாதம் முதல் போகத்தில், 1,400 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைப்பணிகள்



ஆனைமலை: ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், முதல் போக நெல் அறுவடை முடிந்த பகுதிகளில், இரண்டாம் போக சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு வழங்கப்படும் நீரை பயன்படுத்தி, ஆனைமலை ஒன்றியத்தில் இரண்டு போக நெல் சாகுபடி நடக்கிறது. கடந்த மே, மாதம் முதல் போகத்தில், 1,400 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைப்பணிகள் நிறைவடைந்துள்ளன.இதையடுத்து, வயலில் தண்ணீர் நிறுத்தி, இரண்டாம் போக சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். மண்ணில் சத்தை அதிகரிக்கச்செய்ய, வயல்களில் வாத்துகளை மேய்ச்சலுக்காக விட்டுள்ளனர்.வயல்களிலுள்ள புழுக்கள், பூச்சிகள் மற்றும் அறுவடையாகி சிதறிக்கிடக்கும் நெல் மணிகளை வாத்துகள் உட்கொண்டு, எச்சம் இடுவதன் வாயிலாக மண்ணுக்கு சத்துக்கள் கிடைக்கும்.சில இடங்களில், நாற்றாங்கால் விட்டு நாற்றுகள் நடவு செய்ய தயாராகி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து போதிய அளவு நீர் கிடைப்பதால், இந்தாண்டு சாகுபடி பரப்பு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது:ஆனைமலை ஒன்றியத்துக்கு ஆண்டுதோறும், 10 ஹெக்டேர் அளவுக்கு, இயந்திர மற்றும் அணி நெல் நடவுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானிய திட்டம் கடந்த, ஐந்து ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.நடப்பாண்டு, முதல் போகத்துக்கு இத்திட்டம் ஆனைமலைக்கு அறிவிக்கப்படவில்லை. இயந்திரம் மற்றும் அணி நெல் நடவு முறையில், திருந்திய நெல் சாகுபடி கையாளப்படுவதால், நாற்றுகளுக்கு இடையில் சீரான காற்றோட்டம் கிடைத்து, நெல் பயிரில் அதிக துார் பிடித்து, மகசூல் அதிகரித்தது.ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க முடிவதுடன், குறைவான செலவில் அதிக லாபம் ஈட்ட முடிந்தது. இரண்டாவது போக சாகுபடி துவங்கியுள்ளதால், இத்திட்டத்தை அறிவித்து, இலக்கை அதிகப்படுத்த வேண்டும்.ஒரு ஹெக்டேருக்கு மானியத்தை, ஐந்தாயிரத்தில் இருந்து எட்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு இந்த கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X