'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் தலைமறைவானவர் கைது

Added : நவ 19, 2021
Share
Advertisement
லக்னோ:'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் தலைமறைவான பிரேம் குமாரை, பீஹாரில் போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்து உள்ளது.இங்குள்ள வாரணாசியில் இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வின்பேது ஒரு மாணவிக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் பல இடங்களில் மாணவர்களுக்கு மாற்றாக

லக்னோ:'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் தலைமறைவான பிரேம் குமாரை, பீஹாரில் போலீசார் கைது செய்தனர்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்து உள்ளது.இங்குள்ள வாரணாசியில் இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வின்பேது ஒரு மாணவிக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் பல இடங்களில் மாணவர்களுக்கு மாற்றாக வேறு நபர்கள் தேர்வு எழுதியது வெளிச்சத்திற்கு வந்தது.

உ.பி., போலீசாரின் தீவிர விசாரணையில் பீஹாரைச் சேர்ந்த பிரேம் குமார் என்ற நிலேஷ் குமார் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.தேர்வுகளுக்கான பயிற்சி மையம் நடத்தும் இவர், மாணவர்களிடம் 30 - 40 லட்சம் ரூபாய் வரை பெற்று, நீட் தேர்வில் வேறு நபர்களை பங்கேற்க வைத்துள்ளார்.நீட் மட்டுமின்றி பீஹார் போலீஸ் பணி, ஆசிரியர் தகுதித்தேர்வு உள்ளிட்டவற்றிலும் மோசடி செய்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான பிரேம் குமாரை தேடி வந்தனர். இந்நிலையில், பீஹாரின் சாப்ரா கிராமத்தில் பிரேம் குமார் கைதாகி உள்ளதாக லக்னோ போலீசார் கூறி உள்ளனர். மோசடியில் அவருக்கு துணையாக இருந்த அவரது மைத்துனரும், பீஹார் தலைமைச் செயலக ஊழியருமான ரித்தேஷ் குமார் என்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X