சில வரி செய்திகள்...: இந்தியா

Added : நவ 19, 2021
Share
Advertisement
3 சகோதரிகள் தற்கொலைஜான்பூர்: உத்தர பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டம் அஹிரோலியைச் சேர்ந்த பிரீத்தி, 16, அவரது சகோதரிகள் காஜல், 14, ஆர்த்தி, 11, ஆகியோர் நேற்று இரவு சுல்தான்பூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் தந்தை இறந்த நிலையில், பார்வைத் திறன் இழந்த தாயால், இவர்களை காப்பாற்ற இயவில்லை என தெரிகிறது. சகோதரிகளின் முடிவிற்கு வறுமையே
 சில வரி செய்திகள்...: இந்தியா

3 சகோதரிகள் தற்கொலை
ஜான்பூர்: உத்தர பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டம் அஹிரோலியைச் சேர்ந்த பிரீத்தி, 16, அவரது சகோதரிகள் காஜல், 14, ஆர்த்தி, 11, ஆகியோர் நேற்று இரவு சுல்தான்பூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் தந்தை இறந்த நிலையில், பார்வைத் திறன் இழந்த தாயால், இவர்களை காப்பாற்ற இயவில்லை என தெரிகிறது. சகோதரிகளின் முடிவிற்கு வறுமையே காரணம் என போலீசார் தெரிவித்தனர்.
ஆர்யன் கான் நேரில் ஆஜர்
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், 23, போதை பொருள் வழக்கில் கைதானார். அவருககு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அப்போது, மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வாரந்தோறும் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி, அதிகாரிகள் முன் ஆர்யன் கான் நேரில் ஆஜரானார்.

வெள்ளத்தில் 3 பேர் பலி
அமராவதி: ஆந்திராவில் ராயலசீமா, சித்துார் மற்றும் கடப்பா மாவட்டங்களில் பெய்யும் கன மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை பகுதியில் நேற்று கோவிலுக்குள் புகுந்த வெள்ளம், அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட பக்தர்களை அடித்துச் சென்றது. அவர்களில் மூவரின் உடல்கள் மீட்கப்பட்டன; மீதமுள்ளவர்களை தேடும் பணி தொடர்கிறது.
கங்கனா மீது புகார்
போர்ட் பிளேர்: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், சமீபத்தில் 1947ல் நம் நாட்டிற்கு கிடைத்த சுதந்திரம் ஒரு பிச்சை என, கூறினார். அதற்கு மாற்றாக உண்மையான சுதந்திரத்தை 2014ல் அடைந்ததாகவும் தெரிவித்தார். இந்த கருத்து தொடர்பாக நடிகை மீது அந்தமான் நிகோபார் பிரதேச காங்கிரஸ் மகளிர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சுபைதா பேகம், அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.
மொட்டையடித்த அரசியல் பிரமுகர்
நெல்லுார்: ஆந்திராவின் நெல்லுார் மாநகராட்சி தேர்தலில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து நெல்லுாரைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் கப்பேரா சீனிவாசலு தலையின் ஒரு பகுதியை மொட்டை அடித்ததுடன், பாதி மீசையை எடுத்துக் கொண்டார். ''தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மீண்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வரும் வரை, இதே போல இருப்பேன்,'' என, சீனிவாசலு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X