சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கைது

Added : நவ 19, 2021
Share
Advertisement
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கோவை அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீசார் கைது செய்தனர்.கோவை அரசு கலைக் கல்லுாரியில், 6,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லுாரியில் பயின்று வரும் திருமணமான, 19 வயது மாணவி ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில்,

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கோவை அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீசார் கைது செய்தனர்.கோவை அரசு கலைக் கல்லுாரியில், 6,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லுாரியில் பயின்று வரும் திருமணமான, 19 வயது மாணவி ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கல்லுாரியில் பயின்று வரும் மாணவிக்கு கடந்த, 2020 ம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கணவனை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருவது தெரிந்தது.
இந்நிலையில் குடும்ப சூழல் காரணமாக மாணவி சரியாக படிக்கவில்லை. மேலும், குறித்த நேரத்தில் கல்லுாரியில் வழங்கப்பட்ட 'அசைண்மென்ட்'களை அவரால் சமர்பிக்க முடியவில்லை.

இதையடுத்து மாணவியை ஆசிரியர்கள் அறைக்கு வருமாறு துறையின் தலைவராக இருந்த கோவை விளாங்குறிச்சியை சேர்ந்த ரகுநாதன், 42 தெரிவித்தார். கடந்த மார்ச், 16 ம் தேதி ஆசிரியர் அறைக்கு சென்ற மாணவியிடம், ரகுநாதன் சரியாக படிக்காத காரணத்தை கேட்டுள்ளார். மேலும், குடும்ப பிரச்னை குறித்தும் விசாரித்துள்ளார். மாணவியின் நிலை குறித்து அறிந்த ரகுநாதன் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மாணவியின் சொந்த ஊருக்கு நோட்ஸ் கொடுப்பதற்காக காரில் சென்ற ரகுநாதன் மாணவியை காரினுள் இழுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து வெளியில் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், ரகுநாதன் கடந்த நவ., 16 ம் தேதி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது தெரிந்தது.
இதையடுத்து மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர் ரகுநாதன் மீது போலீசார், கடத்தல், மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட ரகுநாதனுக்கு கடந்த, 2019 ம் ஆண்டு திருமணமானது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
மாணவர்களின் போராட்டத்துக்கு பின்னரே தீர்வு
கல்லுாரியில், ரகுநாதன், மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மாணவர்கள் சார்பில் கல்லுாரி முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாததாக கூறிய மாணவர்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும், நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்த பின்னரே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கல்லுாரி நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார் அளித்தும் அதுகுறித்து நிர்வாகம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மாணவர்கள் மீதே நிர்வாகம் தொடர்ந்து குற்றச்சாட்டி வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X