துளிகள் செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : நவ 19, 2021
Share
Advertisement
குழந்தைகள் தினவிழா போட்டிகிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகள் பங்கேற்ற விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி, பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி

குழந்தைகள் தினவிழா போட்டிகிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகள் பங்கேற்ற விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி, பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி கோப்பைகளை பரிசாக வழங்கினார். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.செயல்படாத சிக்னலால் சிக்கல்பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், நெகமம் பழைய போலீஸ் ஸ்டேஷன் எதிரில், ரங்கம்புதுார், தாராபுரம், பொள்ளாச்சி, பல்லடம் ரோடு என, நான்கு ரோடுகள் சந்திப்பு பகுதி உள்ளது.இந்த சந்திப்பில், இரு மாதங்களுக்கு முன் நெகமம் போலீஸ் சார்பில், போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. சில நாட்கள் மட்டுமே இயங்கிய நிலையில், சிக்னலுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுநாள் வரை மீண்டும் சிக்னல் இயங்க, மின் இணைப்பு வழங்கப்படவில்லை.இதனால், ரோட்டில் வாகனங்கள் இயங்குவதில் தடுமாற்றம் ஏற்பட்டு, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. விபத்து தவிர்க்க, சிக்னலை விரைந்து சீரமைத்து இயக்க, நெகமம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் வலியுறுத்தியுள்ளனர்.அங்கன்வாடி மையம் திறப்புபொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, 33வது வார்டு நடராஜ் மணியகாரர் காலனியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஒன்பது லட்சம் ரூபாய் செலவில், புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப்பணிகள் நடைபெற்றன.இப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, நேற்று திறப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். நிர்வாகிகள் பங்கேற்றனர்.எம்.எல்.ஏ., கூறுகையில், 'மக்களுக்கான வளர்ச்சி பணிகளை, அரசு தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், ரோடு விரிவாக்க பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, மக்கள் பாதிக்காத வகையில், பணிகளை வேகப்படுத்த வேண்டும்,' என்றார்.சேவை அமைப்புக்கு பாராட்டுநெகமம் அடுத்துள்ள, சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசப்பட்டது. இதற்கான செலவு தொகையை, 'இன்னர்வீல் கிளப் ஆப் கோவை' அமைப்பு ஏற்றுக்கொண்டது.கிளப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா, பள்ளி தலைமையாசிரியர் செல்வி முன்னிலையில் நடந்தது. தொடர்ந்து, குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கபட்டன.விழாவில், பள்ளியை சேர்ந்த ஐந்து மாணவர்கள் முன்மாதிரி மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.சுகாதாரம் போயேபோச்சுபொள்ளாச்சி நகராட்சி, 18வது வார்டுக்கு உட்பட்டது ஆண்டிய கவுண்டர் வீதி. தற்போது, கரிகாலன் வீதி என பெயர் மாற்றப்பட்டுள்ளது. கிழக்கு - மேற்கு ராஜா மில் ரோட்டில் இந்த வீதி இணையும் பகுதியில், கடும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.அப்பகுதியில், அக்கம்பக்கத்து கடைகளின் குப்பை உள்ளிட்ட கழிவுகள் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. கடையில் பணிபுரிபவர்களுக்கு, குப்பை கொட்டும் பகுதி, திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுகிறது.இது போன்ற மோசமான சூழலால், வீதியில் வசிப்போர், கடை வைத்திருப்போர் துர்நாற்றம், நோய் தொற்று பயத்தில் உள்ளனர். இது குறித்து பல முறை நகராட்சி அதிகாரிகள், துாய்மை பணியாளர்களிடம் முறையிட்டும், எவ்வித பயனும் இல்லை என, மக்கள் புலம்புகின்றனர்.அமைச்சர் பயணிக்கும் ரோட்டை தண்ணீர் ஊற்றிக் கழுவும் அதிகாரிகள், சுகாதார கேடான சூழலில் மக்கள் வசிக்கின்றனர் என்ற கவலையின்றி உள்ளனர்.மா.கம்யூ., கட்சியினர் பேரூராட்சியில் மனுமடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கம் பேரூராட்சி அலுவலகத்தில், மா.கம்யூ., கட்சியினர் நுாறு நாள் வேலை உறுதி திட்டம் குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.மனுவில் கூறயிருப்பதாவது:நுாறு நாள் வேலை உறுதிதிட்டத்தை கொமரலிங்கம் பேரூராட்சி பகுதிக்கும் அரசு விரிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில் 500 பயனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த பேரூராட்சி பகுதியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இதில், பல ஆயிரம் பேர் நிரந்தர வேலை, வருவாய் இன்றி சிரமப்படுகின்றனர். இந்நிலையில் குறிப்பிட்ட அளவு பயனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என வரையறை செய்துள்ளதை ஏற்க முடியாது.இதற்குத்தீர்வாக, இத்திட்டத்தில் பங்கேற்க விருப்ப மனு கொடுக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். இதோடு இந்த வேலை உறுதித்திட்டத்தை துரிதமாக பேரூராட்சி பகுதியில் நடைமுறைப்படுத்தவேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டுள்ளனர்.தரைத்தளம் உயர்த்தும் பணி தீவிரம் நான்கு வழிச்சாலை அமைக்க விளைநிலங்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான லோடு கிராவல் மண் கொட்டி தரைத்தளம் உயர்த்தப்படுகிறது.மடத்துக்குளம் தாலுகா மைவாடி, வேடபட்டி, கழுகரை உள்ளிட்ட கிராமப்பகுதியிலுள்ள விளை நிலங்களுக்கு மத்தியில் நான்கு வழி சாலை பணிகள் தீவிரமடைந்துள்ளன.பொள்ளாச்சி தொடங்கி திண்டுக்கல் வரை நீளும் இந்த பாதை, 3,649 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது.உடுமலை, மடத்துக்குளம், நகரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், கிராமங்களின் ஓரங்களில் வாகனங்கள் பயணிக்கும் விதமாகவும், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவில், வடக்கு திசையில் இந்த நான்கு வழிச்சாலை கட்டமைக்கப்படுகிறது.இதற்காக விளை நிலங்களுக்கு மத்தியில் 10 அடி உயரத்திற்கு மண் கொட்டப்பட்டு கனரக இயந்திரங்களைபயன்படுத்தி சமன் செய்யப்படுகிறது. மைவாடி, வேடபட்டி உள்ளிட்ட சில இடங்களில் தார் ரோடும் அமைக்கப்பட்டுள்ளது.பட்டாசு வெடித்து கொண்டாட்டம் மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதை, உடுமலை நகரில், காங்., கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.நிகழ்ச்சிக்கு, காங்., திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் மதுசூதனன், மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன், மா.கம்யூ., நகரச்செயலாளர் பாலதண்டபாணி, குடிமங்கலம் வட்டார பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.விவசாயிகள் போராட்டம் குறித்து, நிர்வாகிகள் பேசினர். பஸ் ஸ்டாண்ட் முன், பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.மாணவர்கள் கள ஆய்வுஉடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி, தாராபுரம் ரோட்டில், தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. புதிதாக துவக்கப்பட்டுள்ள இக்கல்லுாரியில், 40 மாணவ, மாணவியர் முதலாமாண்டில் இணைந்துள்ளனர்.இந்நிலையில், ஒவ்வொரு பாடத்திட்டத்தின் கீழ், செயல்விளக்கத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில் நேரடியாகச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.அவ்வகையில், நேற்று, கால்நடை உடற்கூறியியல் பாடத்தின் செயல்விளக்கம் தொடர்பாக, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள கால்நடை மருத்துவமனைக்கு வருகை புரிந்தனர்.அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம், கால்நடை சிகிச்சை முறைகள், அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.இதையடுத்து, மீன் மார்க்கெட் சென்றனர். அங்கு வியாபாரிகளிடம், தருவிக்கப்படும் கடல் மற்றும் அணை மீன் வகைகள், மீன்பிடிப்பு பகுதிகள் குறித்து அறிந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X