மழைநீர் சேமிப்பு குழி இல்லீங்க! இது பாதாள சாக்கடை திட்ட குழி

Added : நவ 19, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாரதி வீதியில், ரோடு மோசமாக உள்ளதுடன், பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழியில் இருந்து நீர் வெளியேறுவதால், விபத்துகள் ஏற்படுகிறது.பொள்ளாச்சியில், பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே, ஆள் இறங்கும் குழிகள் தரமின்றி அமைக்கப்பட்டது. தற்போது, பல இடங்களில் ஆள் இறங்கும் குழிகளின் கட்டமைப்புகள் உடைந்துள்ளன.இந்நிலையில், நியூஸ்கீம் ரோடு அருகிலுள்ள

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாரதி வீதியில், ரோடு மோசமாக உள்ளதுடன், பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழியில் இருந்து நீர் வெளியேறுவதால், விபத்துகள் ஏற்படுகிறது.பொள்ளாச்சியில், பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே, ஆள் இறங்கும் குழிகள் தரமின்றி அமைக்கப்பட்டது. தற்போது, பல இடங்களில் ஆள் இறங்கும் குழிகளின் கட்டமைப்புகள் உடைந்துள்ளன.இந்நிலையில், நியூஸ்கீம் ரோடு அருகிலுள்ள பாரதி வீதியில், பாதாள சாக்கடை குழிகள் மக்களை பந்தாடுகிறது. இந்த ரோட்டில், தனியார் மருத்துவமனைகள் அதிகளவு உள்ளன. இங்கு, தினமும், நுாற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நிறைந்த சாலையாக உள்ளது. மக்கள் அதிகளவு பயன்படுத்தும் ரோடு மோசமாகி விபத்துகள் நடைபெறும் இடமாக மாறியுள்ளது.மக்கள் கூறியதாவது:பொள்ளாச்சி பாரதி வீதியில் ரோடு மோசமாக உள்ளது. அறுவை சிகிச்சை முடித்து செல்லும் நோயாளிகள், இந்த ரோட்டில் வாகனங்களில் செல்லும் போது சிரமப்படுகின்றனர்.குழி, மேடாக உள்ள இந்த ரோட்டில் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் மிகுந்த சிரமப்படுகின்றனர். இந்த ரோட்டில் நடந்து செல்வோர், கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி நோயாளிகளாக மாறும் அவல நிலை நீடிக்கிறது.மேலும், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளில் இருந்து வெளியேறும் நீர் குட்டை போன்று தேங்கி நிற்கிறது. கொசு உற்பத்திக்கு புகலிடமாக மாறியுள்ளதுடன்; அவ்வழியாக வருவோருக்கு தொற்று நோய்களை பரப்பும் இடமாக உள்ளது.இந்த ரோட்டை சீரமைக்க பலமுறை வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மிகுந்த சிரமமாக உள்ளது. கர்ப்பிணிகள், நோயாளிகளை கருத்தில் கொண்டு இந்த ரோட்டை சீரமைக்கவும், ஆள் இறங்கும் குழியில் இருந்து வெளியேறும் நீரை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X