கணக்கில் காட்டாத ரூ.200 கோடி சிக்கியது சிமென்ட் நிறுவனம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
புதுடில்லி:கோல்கட்டாவைச் சேர்ந்த ஒரு குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், அந்த குழுமம் கணக்கில் காட்டாமல் 200 கோடி ரூபாய் வருமானமாக ஈட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, டில்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 24 இடங்களில் வருமான வரித் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.இந்நிலையில் அந்த சோதனை குறித்த

புதுடில்லி:கோல்கட்டாவைச் சேர்ந்த ஒரு குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், அந்த குழுமம் கணக்கில் காட்டாமல் 200 கோடி ரூபாய் வருமானமாக ஈட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, டில்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 24 இடங்களில் வருமான வரித் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.இந்நிலையில் அந்த சோதனை குறித்த விபரங்களை, சி.பி.டி.டி., எனப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டது.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில்,சிமென்ட் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வரும் ஒரு குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அசாம், மேகாலயா மற்றும் டில்லியில் அந்த குழுமத்திற்கு சொந்தமாக உள்ள இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
அதில், இந்த குழுமம் கணக்கில் காட்டாமல் 200 கோடி ரூபாய் வருமானமாக ஈட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழுமத்தின் கீழ் இயங்கும் சில நிறுவனங்கள், ஊழியர்களின் பெயர்களில் இயங்கி வருவதும்; அந்த ஊழியர்கள், அதிக அளவில் சம்பாதித்து வருவதும் கண்டறியப்பட்டது.
இதை மறைக்க, பல முறைகேடுகளை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அதற்கான ஆவணங்களும், ரசீதுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; 1.30 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X