'மது அருந்துவோர் பொய் சொல்ல மாட்டார்கள்'

Added : நவ 19, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கந்த்வா:மத்திய பிரதேசத்தின் கலால் அதிகாரி ஒருவர், 'மது அருந்துவோர் பொய் சொல்ல மாட்டார்கள்' என கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்து உள்ளது.கொரோனா தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன்படி கந்த்வா மாவட்டத்தில் 'இரு 'டோஸ்' தடுப்பூசி
 'மது அருந்துவோர் பொய்  சொல்ல மாட்டார்கள்'

கந்த்வா:மத்திய பிரதேசத்தின் கலால் அதிகாரி ஒருவர், 'மது அருந்துவோர் பொய் சொல்ல மாட்டார்கள்' என கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்து உள்ளது.
கொரோனா தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன்படி கந்த்வா மாவட்டத்தில் 'இரு 'டோஸ்' தடுப்பூசி செலுத்தியோருக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும்' என, மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது.
மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன.அவற்றில், இரு டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றினை காண்பித்தால் மட்டுமே மதுபானம் கிடைக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் மாவட்ட கலால் அதிகாரி ஆர்.பி.கிரார் கூறியதாவது: மதுபானம் வாங்க வருவோர் தடுப்பூசி செலுத்தியது குறித்து வாய்மொழி உத்தரவாதம் அளித்தால் போதும். ஏனெனில் மது அருந்துவோர் பொய் சொல்ல மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
21-நவ-202104:20:38 IST Report Abuse
meenakshisundaram இதை ஆத்திசூடி ,திருக்குறள் ஆகியவற்றில் இணைத்து பாட நூல் திட்டத்தில் சேர்க்கும் படி லியோனி இடம் கோருகிறேன் .
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
20-நவ-202117:02:46 IST Report Abuse
Thiagarajan Kodandaraman நம்ம தமிழகத்தில் அனைவரையும் உண்மை பேச வைக்க இதை உபயோக படுத்துவார்கலோ .ஒரு குவாட்டர் அடக்க விலை இருபதாம் அதை ஒட்டு போட்ட குடி மக்களுக்கு விற்பது நூற்றி முப்பதாம் ..அய்யஹோ நெஞ்சு துடிக்கிதே ...தினசரி ஆட்களுக்கு ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி தரலாமே ...இதன் மூலம் நிரந்தர முதல்வர் பதவியில் தொடரலாமே
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
20-நவ-202114:44:42 IST Report Abuse
sankar இனி அரசியல் வாதிகள், கோர்ட்டில் பொய் சாட்சி சொல்கிறவர்கள் போன்றவர்களுக்கு இலவசமாக மது சப்ளை செய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X