செய்தி செய்தி

தமிழ்நாடு

பிரசவம் சிகிச்சைக்கு விழிப்புணர்வு

Added : நவ 19, 2021
Share
Advertisement
உடுமலை: நகர் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், பிரசவ எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 13 வட்டாரங்களில், 23 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 80க்கும் மேற்பட்ட கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில், பிரசவகால முன், பின் பராமரிப்பு, அறுவை சிகிச்சை

உடுமலை: நகர் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், பிரசவ எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 13 வட்டாரங்களில், 23 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 80க்கும் மேற்பட்ட கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில், பிரசவகால முன், பின் பராமரிப்பு, அறுவை சிகிச்சை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டு, உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கர்ப்பிணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால், நகர், கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'தற்போதைய சூழலில், பலரும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கர்ப்பிணிகளின் வருகையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X