பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல்லில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல்லில், நேற்று காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதையடுத்து, நாமக்கல்லில் நேற்று காலையில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மாணவ, மாணவியர் மழையில் நனைந்தும், சிலர் குடைபிடித்தபடியும் சென்றனர். நேற்று

நாமக்கல்: நாமக்கல்லில், நேற்று காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதையடுத்து, நாமக்கல்லில் நேற்று காலையில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மாணவ, மாணவியர் மழையில் நனைந்தும், சிலர் குடைபிடித்தபடியும் சென்றனர். நேற்று முன்தினம் இரசு மாவட்டம் முழுவதும் பெய்தது. நேற்று காலை,7:00 மணி நிலவரப்படி மழை விபரம் வருமாறு: (மி.மீ.,) எருமப்பட்டி, 10, மங்களபுரம், 52, மோகனூர், 5, நாமக்கல், 2, ப.வேலூர், 5, ராசிபுரம், 10.20, சேந்தமங்கலம், 11, திருச்செங்கோடு, 4.60, கலெக்டர் அலுவலகம், 3.50, கொல்லிமலை, 15 என மொத்தம், 124.3 மில்லி மீட்டர் மழை பெய்தது. சராசரியாக, 10.35 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.


* பள்ளிபாளையம் சுற்று வட்டாரத்தில், நேற்று அதிகாலை முதலே மழை தொடர்ந்து பெய்தது. இதனால் சூரியன் வெளிச்சத்தை நேற்று பார்க்க முடியாவில்லை. மதியம், 2:00 மணிளவில் கூட, காலை, 6:00 மணி போல காணப்பட்டது. நடைபாதை, தள்ளுவண்டி வியாபாரிகள் கடைகள் போடவில்லை. கட்டுமானம், பெயின்டிங் பணிகள் பாதிக்கப்பட்டன. குளிரால் பொதுமக்கள் தனித்தனர். ஆற்றுப்பாலத்தில் மதியம் நேரத்தில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X