நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விண்ணப்ப படிவம் வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விண்ணப்ப படிவம் வினியோகம்

Added : நவ 19, 2021
Share
நாமக்கல்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில் இன்று (நவ.,19) காலை, 10:00 மணி முதல் விண்ணப்ப படிவங்கள் வினியோகம் தொடங்குகிறது. எம்.பி.,யும், நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளருமான ராஜேஷ்குமார் இதனை தொடங்கி வைக்கிறார். படிவங்களை வழங்குவதற்காக தேர்தல் ஆணைய தலைவராக கணபதி, ஆணையாளர்களாக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்

நாமக்கல்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில் இன்று (நவ.,19) காலை, 10:00 மணி முதல் விண்ணப்ப படிவங்கள் வினியோகம் தொடங்குகிறது. எம்.பி.,யும், நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளருமான ராஜேஷ்குமார் இதனை தொடங்கி வைக்கிறார். படிவங்களை வழங்குவதற்காக தேர்தல் ஆணைய தலைவராக கணபதி, ஆணையாளர்களாக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை, 10 ரூபாய் கட்டணமாக செலுத்தி மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு, 10 ஆயிரம் ரூபாய், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு, 2,500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டுகளில் போட்டியிட விரும்புவோர் மேற்கண்ட கட்டணத் தொகையில் பாதியை செலுத்தினால் போதுமானது. இத்தகவலை கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X