பொது செய்தி

இந்தியா

மத்திய அமைச்சர் கூறுவது என்ன?

Added : நவ 19, 2021
Share
Advertisement
புதுடில்லி:மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை விற்பதில் உள்ள தடைகளை நீக்கும் நோக்கிலும், சிறு, குறு விவசாயிகளின் நலன் கருதியும், மூன்று சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு பெரும் பலன் அளிக்கக் கூடியவை. விவசாயிகளின் வாழ்க்கையில்

புதுடில்லி:மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:
விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை விற்பதில் உள்ள தடைகளை நீக்கும் நோக்கிலும், சிறு, குறு விவசாயிகளின் நலன் கருதியும், மூன்று சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு பெரும் பலன் அளிக்கக் கூடியவை.

விவசாயிகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான், இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. விவசாய அமைப்புகளிடம் இந்த சட்டங்களின் பலன்கள் பற்றி எடுத்துக் கூறியும், அவர்களை ஏற்க வைக்க முடியாமல் போனது பெரும் வருத்தம் அளிக்கிறது.

விவசாயிகள் நலனில் மத்திய அரசு பெரும் அக்கறை வைத்து உள்ளது. அவர்களின் சம்மதத்தை பெற முடியாமல் போனதால், மூன்று சட்டங்களை வாபஸ் பெறும் முடிவு வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X