பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை திருமணங்களில் ஈடுபட்ட 20 பேர் கைது

Added : நவ 19, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களில் ஈடுபட்ட, 20 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில், முதலாவதாக நாமக்கல் உள்ளது. இங்குள்ள கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், திருச்செங்கோடு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களில் ஈடுபட்ட, 20 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில், முதலாவதாக நாமக்கல் உள்ளது. இங்குள்ள கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், திருச்செங்கோடு பகுதிகளில் குழந்தை திருமணங்கள் அதிகப்படியாக நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அதன்படி, ஏ.டி.எஸ்.பி., ஒருவர் தலைமையில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், 30 வழக்குகளில் போக்சோ மற்றும் குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக செயல்பட்டது என்ற வகையில் நேற்று முன்தினம், 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருச்செங்கோடு, ப.வேலூர் பகுதிகளை சேர்ந்தவர்கள். 13 முதல் 17 வயதுடைய குழந்தைகளை திருமணம் செய்துள்ளதும், அதற்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், 10 வழக்குகளில் தொடர்புடையவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். குழந்தை திருமணங்கள் குறித்து தெரியவந்தால் பொதுமக்கள் சைல்டு லைன், 1800, அவசர போலீஸ், 100, நாமக்கல் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81216, மாவட்ட சிறப்பு பிரிவு எண் 94981 01020, 04286 280500 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X