பொது செய்தி

தமிழ்நாடு

விடுதிகளில் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க அழைப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
கரூர்: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் அரசு விடுதிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர், மாணவியருக்கு, 17 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் நான்கு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவியர், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு

கரூர்: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் அரசு விடுதிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர், மாணவியருக்கு, 17 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் நான்கு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவியர், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., படிப்புகளில் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படுகின்றன. 10ம் வகுப்பு, பிளஸ்2 வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டி பயிற்சி வழங்கப்படும். இதற்கான, விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். பள்ளி விடுதிகளுக்கு வரும், 26க்குள், கல்லூரி விடுதிகளுக்கு வரும், 25க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அவர், தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X