பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை பயிர்களுக்கு பாதுகாப்பு குறித்து அறிவுரை

Added : நவ 19, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கவிப்பிரியா வெளியிட்டுள்ள அறிக்கை: குளித்தலை வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழையால், பெய்து வரும் தொடர் மழையால் வாழை சாகுபடி செய்யப்படும் பெருவாரியான தோட்டங்களில், மழைநீர் தேக்கத்தை தவிர்க்க வயல்களில் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். மழை நீரை தோட்டங்களிலிருந்து வடிக்கும்போது. இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணையாக

குளித்தலை: குளித்தலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கவிப்பிரியா வெளியிட்டுள்ள அறிக்கை: குளித்தலை வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழையால், பெய்து வரும் தொடர் மழையால் வாழை சாகுபடி செய்யப்படும் பெருவாரியான தோட்டங்களில், மழைநீர் தேக்கத்தை தவிர்க்க வயல்களில் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். மழை நீரை தோட்டங்களிலிருந்து வடிக்கும்போது. இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணையாக இடப்பட்டுள்ள பொட்டாஷ் உரம் தண்ணீரில் கரைந்து வீணாகிறது. இதனால் வாழையில், 20 முதல், 25 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்படலாம். இதை தவிப்பதற்கு பருவமழை நின்றவுடன் மரம் ஒன்றுக்கு, 100 கிராம் யூரியா, 150 கிராம் மூரியேட் ஆப் பொட்டாஷ், 100 கிராம் டோலமைட் (கால்சியம் மக்னீசியம் கார்பனேட்) உரங்களை மண்ணில் இடவேண்டும். மேலும் இலை வழியூட்டமாக, 1 சத பொட்டாஷியம் நைட்ரேட்கரைசலையும் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம்) இ-1 சத கால்சியம் நைட்ரேடடையும் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம்) இலைமேல் தெளிக்க வேண்டும். மேலும் வாழைக்கு மிக முக்கியமாக தேவைப்படும் நுண்ணூட்ட சத்துகளும், மழை நீரை தோட்டங்களிலிருந்து வடிக்கும் பொழுது வீணாக வாய்ப்புள்ளது. இந்த இழப்புகளை சரிகட்ட வாழைக்கு நுண்ணூட்ட சத்துக்கள் இடுவது அவசியம். திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின், வாழை நுண்ணூட்ட கலவையான பனானா சக்தியை இரண்டு சத கரைசலாக (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம்) இலை மேல் தெளிக்கவும். ஆகவே வாழை சாகுபடியில் அதிக பருவமழை பொழிவினால் ஏற்பட்டுள்ள இத்தகைய பொட்டாஷ் மற்றும் நுண்ணூட்ட சத்துகளின் இழப்புகளை மேற்சொன்ன முறையில் நிவர்த்தி செய்து அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X