பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய அளவில் போட்டி: கபடி வீரர்கள் தேர்வு

Added : நவ 19, 2021
Share
Advertisement
கரூர்: தேசிய அளவில் நடைபெறும் கேலோ இந்தியா - 2021 கபடி போட்டியில் தமிழக அணி சார்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்ய வரும், 24ல் சென்னையில் தேர்வு நடக்கிறது. இதில், கரூர் மாவட்டத்திலிருந்து, 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவில் தலா நான்கு பேரை தேர்வு செய்யும் போட்டி, வெள்ளியணையில் உள்ள தனியார் கல்லூரி விளையாட்டு திடலில் நடந்தது. மாவட்ட கபடி கழக தலைவர் சேதுராமன் தலைமை

கரூர்: தேசிய அளவில் நடைபெறும் கேலோ இந்தியா - 2021 கபடி போட்டியில் தமிழக அணி சார்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்ய வரும், 24ல் சென்னையில் தேர்வு நடக்கிறது. இதில், கரூர் மாவட்டத்திலிருந்து, 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவில் தலா நான்கு பேரை தேர்வு செய்யும் போட்டி, வெள்ளியணையில் உள்ள தனியார் கல்லூரி விளையாட்டு திடலில் நடந்தது. மாவட்ட கபடி கழக தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு விளையாடினர். கல்லூரி செயலாளர் நாராயணசாமி, முதல்வர் ரமேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிறந்த வீரர்களை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டி உறுப்பினர்கள் ஆண்கள், பெண்கள் பிரிவில் தலா நான்கு பேரை தேர்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X