பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழைநீர் வடியும் பணி ஆய்வு

Added : நவ 19, 2021
Share
Advertisement
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், மழையால் தண்ணீர் தேங்கிய இடங்களில் மழை நீர் வடிய வைக்கும் பணிகளை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம் பஞ்சாயத்து, கொம்பாடிப்பட்டி வல்லம் சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். இந்த பகுதியில் தேங்கிய மழை நீர், பொக்லைன் இயந்திரம் கொண்டு செல்லும் வகையில்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், மழையால் தண்ணீர் தேங்கிய இடங்களில் மழை நீர் வடிய வைக்கும் பணிகளை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம் பஞ்சாயத்து, கொம்பாடிப்பட்டி வல்லம் சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். இந்த பகுதியில் தேங்கிய மழை நீர், பொக்லைன் இயந்திரம் கொண்டு செல்லும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டது. இதன் மூலம் மழை நீர் வடிந்தது.

* சிந்தலவாடி பஞ்சாயத்து பகுதி யில் மத்திப்பட்டி, வீரணம்பட்டி, புவனாசிப்பட்டி ஆகிய இடங்களில் மழை நீர் சாலையோரம் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர். இந்த இடங்களில் தேங்கிய மழை நீர் அகற்றும் பணி நடந்தது.


* கருப்பத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, மேட்டுப்பட்டி சாலையில் மழை நீர் வடியாமல் தேங்கியது. பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பணிகள் நடந்தன. வருவாய்த்துறை சார்பில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் வெங்கடேசன் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். சிந்தலவாடி வி.ஏ.ஓ., பிரபு, பிள்ளபாளையம் வி.ஏ.ஓ., ஸ்டாலின் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X