பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் உறுப்பினர் சேர்க்கை இலக்கு

Added : நவ 19, 2021
Share
Advertisement
கரூர்: ''கரூர் மாவட்டத்தில், ஒரு லட்சம் உறுப்பினர் சேர்க்கை இலக்கு,'' என, பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசினார்.கரூரில், கரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசியதாவது: பிரதமர் மோடி ஓய்வின்றி உழைத்து வருகிறார். இதுபோல, நிர்வாகிகளும் உழைத்து கட்சி வளர்க்க வேண்டும். மேலும் மாவட்டத்தில், ஒரு

கரூர்: ''கரூர் மாவட்டத்தில், ஒரு லட்சம் உறுப்பினர் சேர்க்கை இலக்கு,'' என, பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசினார்.


கரூரில், கரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசியதாவது: பிரதமர் மோடி ஓய்வின்றி உழைத்து வருகிறார். இதுபோல, நிர்வாகிகளும் உழைத்து கட்சி வளர்க்க வேண்டும். மேலும் மாவட்டத்தில், ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். என்னை, 24 மணி நேரம் அழைத்து பேசலாம். நீங்கள் எப்போது கூப்பிட்டாலும், உங்களுடன் இணைந்து வேலை செய்ய காத்திருக்கிறேன். நிர்வாகிகள், தங்கள் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கலாம். தற்போது சிறப்பு வாக்காளர் முகாம் நடந்து வருகிறது. இதில், அதிகளவில் வாக்காளர்களை சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். நகர உள்ளாட்சி தேர்தலில், விருப்ப மனு தாக்கல் தொடங்க இருக்கிறது. இதில், அதிகளவில் விரும்ப மனு அளிக்க வேண்டும். கிளை அளவில் கட்சியில் வளர்த்தால், அதிகளவில் ஓட்டு பெற முடியும். மாநில தலைவர், 120 கி.மீ., வேகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கிறார். அதற்கு ஈடு கொடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X