'ஒளி' கிடைக்கும்! பண்ணை வீடுகளுக்கு இரவு நேரத்தில் மின்சாரம்:புத்தாண்டு நேரத்தில் வழங்க கர்நாடகா முடிவு

Added : நவ 19, 2021
Share
Advertisement
பெங்களூரு:மாநிலத்தின் பண்ணை வீடுகளுக்கு, 'ஒளி' திட்டத்தின் கீழ், இரவு நேரத்தில் மின்சாரம் வினியோகிக்க, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இரவில் விஷ ஜந்துக்கள் பயத்துடன் வாழும் மக்கள், படிக்க முடியாமல் அவதிப்பட்ட மாணவர்களுக்கு, உதவியாக இருக்கும்.கிராமங்களில் வசிக்கும், ஏழைகளின் வீடுகளுக்கு மின் இணைப்பு ஏற்படுத்தும் நோக்கில், கர்நாடக அரசு, 'ஒளி' என்ற

பெங்களூரு:மாநிலத்தின் பண்ணை வீடுகளுக்கு, 'ஒளி' திட்டத்தின் கீழ், இரவு நேரத்தில் மின்சாரம் வினியோகிக்க, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இரவில் விஷ ஜந்துக்கள் பயத்துடன் வாழும் மக்கள், படிக்க முடியாமல் அவதிப்பட்ட மாணவர்களுக்கு, உதவியாக இருக்கும்.
கிராமங்களில் வசிக்கும், ஏழைகளின் வீடுகளுக்கு மின் இணைப்பு ஏற்படுத்தும் நோக்கில், கர்நாடக அரசு, 'ஒளி' என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டத்துக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ஊக்கமடைந்துள்ள மின்சாரத்துறை, தற்போது பண்ணை வீடுகளுக்கு மின் இணைப்பு ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
கர்நாடகாவில், ஒரு லட்சம் பண்ணை வீடுகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வீடுகளுக்கு, 'ஹெஸ்காம்' எனும் ஹூப்பள்ளி மின் வினியோக நிறுவனம், 'ஜெஸ்காம்' எனும் குல்பர்கா மின் வினியோக நிறுவனம் மூலம் மின் இணைப்பு வழங்க அரசு ஆலோசிக்கிறது.
சோதனை முறையில், இரண்டு மாவட்டங்களில் திட்டத்தை செயல்படுத்த அரசு தயாராகிறது. புத்தாண்டு வேளையில், திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.இது தொடர்பாக, மின்சாரத்துறை அதிகாரியொருவர் கூறியதாவது:
பண்ணை வீடுகளுக்கு, இரவு நேரத்தில் மின்சாரம் கிடைக்காததற்கு, நீர் பாசன பம்ப் செட்டுகளே முக்கிய காரணம்.பண்ணை வீடுகளுக்கு இரவில் வினியோகிக்கும் மின்சாரத்தை, பம்ப் செட்களுக்கும் பயன்படுத்தினால், பிரச்னை ஏற்படும் என்பதால், பண்ணை வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.மாநிலத்தில் 34.43 லட்சம் விவசாய நீர்ப்பாசன பம்ப் செட்டுகள் உள்ளன. இவற்றில் முறையான, விதிமீறலான பம்ப் செட்டுகளும் அடங்கும். இவை தினமும் 24 மணி நேரம் செயல்பட்டால், மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும்.
மின்சாரம் வினியோகிக்க, சரியான பாதைகள் இல்லை. தற்போதுள்ள மின் மாற்றிகள், மின் பாதைக்கு அழுத்தம் அதிகரிக்கும்.மின்சாரம் வினியோகிப்பதில், தொந்தரவு ஏற்படலாம். இதை மனதில் கொண்டே, இரவு நேரத்தில் பண்ணை வீடுகளுக்கு, மின்சாரம் வினியோகிப்படவில்லை.
பண்ணை வீடுகளில் வசிப்பவர்கள் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். விஷ ஜந்துகள் பயத்துடன் வாழ்கின்றனர்.மாணவர்கள் படிப்பதற்கும் தொந்தரவு ஏற்படுகிறது. இவர்களின் வசதிக்காக, இரவு நேரத்தில் மின்சாரம் வழங்க, அரசு முன் வந்துள்ளது.
ஹெஸ்காம், ஜெஸ்காம் எல்லைக்கு உட்பட்ட, தலா ஒரு மாவட்டத்தில், 'ஒளி' திட்டத்தின் கீழ், இரவு நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும். இம்மாவட்டங்களில் மின்சார பாதை, மின் மாற்றிகள், திட்டத்துக்கு ஏற்படும் செலவு குறித்து, ஹெஸ்காம், ஜெஸ்காம் ஆய்வு செய்கின்றன. டிசம்பர் இறுதிக்குள் அறிக்கை கிடைக்கும்.
அதன்பின் முதல்வருடன் ஆலோசனை நடத்தி, திட்டம் வகுக்கப்படும்.திட்டத்தை செயல்படுத்த, கர்நாடக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைக்க வேண்டும். ஒப்புதல் கிடைத்த பின், திட்டத்தை செயல்படுத்துவோம்.பண்ணை வீடுகளுக்கு இரவு நேரத்தில் மின்சாரம் வழங்க, தனி 'பீடர்' செய்து, 'சிங்கிள் பேஸ்' மின்சாரம் வினியோகிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X