'மேலவை தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களை பிடிக்கும்!'

Added : நவ 19, 2021
Share
Advertisement
துமகூரு:''மேலவை தேர்தல், அனைத்து தலைவர்கள் தலைமையில் எதிர்க்கொள்வோம். மிக அதிகமான இடங்களை, பா.ஜ., கைப்பற்றும்,''' என, முன்னாள் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.துமகூரில் கூறியதாவது:கர்நாடகாவில் காங்கிரஸ் நலிந்துள்ளது. சித்தராமையா, சிவகுமார் இடையிலான முட்டி மோதலால், அக்கட்சி மண்ணை கவ்வும். உட்கட்சி பூசலால் அவதிப்படும் காங்கிரசை புறக்கணித்து, பா.ஜ.,வை மக்கள்

துமகூரு:''மேலவை தேர்தல், அனைத்து தலைவர்கள் தலைமையில் எதிர்க்கொள்வோம். மிக அதிகமான இடங்களை, பா.ஜ., கைப்பற்றும்,''' என, முன்னாள் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.
துமகூரில் கூறியதாவது:கர்நாடகாவில் காங்கிரஸ் நலிந்துள்ளது. சித்தராமையா, சிவகுமார் இடையிலான முட்டி மோதலால், அக்கட்சி மண்ணை கவ்வும். உட்கட்சி பூசலால் அவதிப்படும் காங்கிரசை புறக்கணித்து, பா.ஜ.,வை மக்கள் ஆதரிப்பர்.மேலவை தேர்தலுக்கு, கட்சி மேலிடம் வேட்பாளர்களை தேர்வு செய்யும்.
மத்திய அரசு விவசாய சட்டங்களை, திரும்ப பெற்றதன் மூலம், விவசாயிகளின் போராட்டத்தை மதித்துள்ளது. எதிர்க்கட்சிகள் கூறுவதை போன்று, இதில் அரசியல் நோக்கம் இல்லை. மாநிலத்தில் மழை பாதிப்பு குறித்து, மாவட்ட கலெக்டர், உயர் அதிகாரிகளுடன், கூட்டம் நடத்தப்பட்டது. அதிகாரிகளுடன், முதல்வர் நிரந்தரமாக கூட்டம் நடத்துகிறார்.
பிட் காயின் வழக்கில், எந்த ஆதாரங்கள் இல்லையென்றாலும், காங்கிரஸ் தேவையின்றி குற்றம்சாட்டுகிறது. இவர்களுக்கு அரசை எதிர்க்க, எந்த அஸ்திரங்களும் கிடைக்காததால், பிட் காயின் விஷயத்தை வைத்துக்கொண்டு, அவப்பிரசாரம் செய்கின்றனர்.
தற்போது முதல்வர் நாற்காலி காலியில்லை. முதல்வர் மாற்றம் வெறும் ஊகம்.முதல்வராக பசவராஜ் பொம்மை, ஆட்சி காலத்தை நிறைவு செய்வார். இவரது தலைமையில், தேர்தலை சந்திக்க வேண்டுமென, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X