சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தங்கும் விடுதியில் பெண் கழுத்து நெரித்து கொலை: உடன் வந்தவருக்கு வலை; கள்ளக்காதல் காரணமா?

Added : நவ 19, 2021
Share
Advertisement
ஆத்தூர்: தனியார் தங்கும் விடுதியில் பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால், அவருடன் வந்த வாலிபர் யார், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா என, போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை, உழவர் சந்தை பஸ் ஸ்டாப் அருகே தனியார் தங்கும் விடுதி உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு, ஒரு வாலிபரும், பெண்ணும் அறையெடுத்து தங்கினர். நள்ளிரவு,

ஆத்தூர்: தனியார் தங்கும் விடுதியில் பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால், அவருடன் வந்த வாலிபர் யார், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை, உழவர் சந்தை பஸ் ஸ்டாப் அருகே தனியார் தங்கும் விடுதி உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு, ஒரு வாலிபரும், பெண்ணும் அறையெடுத்து தங்கினர். நள்ளிரவு, 11:00 மணிக்கு, வாலிபர் உணவு வாங்கி வருவதாக, விடுதி பணியாளர் அருண், 32, என்பவரிடம் கூறிச்சென்றவர் திரும்ப வரவில்லை. நேற்று அறை திறக்கப்படாமல் பூட்டியிருந்ததால், சந்தேகமடைந்த பணியாளர், காலை, 8:00 மணிக்கு மாற்று சாவி உதவியுடன் அறையை திறந்தார். அப்போது, சேலையால் கழுத்து நெரித்து, கட்டிலுடன் கட்டப்பட்ட நிலையில் பெண் கொல்லப்பட்டு கிடந்தார். பணியாளர் புகார்படி, ஆத்தூர் டவுன் போலீசார் விசாரித்தனர். அதில், கடலூர் மாவட்டம், அடரிகளத்தூர், காஞ்சிராங்குளத்தை சேர்ந்த, கருப்பையா மனைவி சிலம்பரசி, 30, என்பதும், அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதும் தெரிந்தது. மேலும், நேற்று முன்தினம் காலை, சிலம்பரசி வீட்டில் இருந்து நகை அடகு வைக்க செல்வதாக கூறி வந்தவர் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. ஆத்தூர் டவுன் போலீசார், சிலம்பரசியுடன் வந்தவர் யார், கொலைக்கு காரணம் என்ன என விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், 'விடுதியில் திருமணமான பெண், வேறு ஒரு ஆணுடன் தங்கியுள்ளார். சில மணி நேரத்தில் அந்த நபர் அறையை விட்டு சென்றுள்ளார். பெண்ணை கொன்றுவிட்டு தலைமறைவாகியுள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா, வேறு காரணமா என, இரு தனிப்படை அமைத்து விசாரணை நடக்கிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X