தமிழ்நாடு

மரத்தை காணோம்! கிராம சபையில் 'பகீர்' புகார்... செலவு கணக்கில் ரூ.4.5 லட்சம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
அன்னுார்:'மரக்கன்று நடுவதற்கு 4.5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. ஆனால், ஒரு மரம் கூட இல்லை' என, கிராம சபை கூட்டத்தில், சரமாரியாக புகார் தெரிவிக்கப்பட்டது.கரியாம்பாளையம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் செய்யப்பட்ட பணிகள் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம், சுக்ரமணி கவுண்டன் புதூரில் நேற்று நடந்தது. ஊராட்சித் தலைவர் செல்வி
 மரத்தை காணோம்!  கிராம சபையில் 'பகீர்' புகார்... செலவு கணக்கில் ரூ.4.5 லட்சம்



அன்னுார்:'மரக்கன்று நடுவதற்கு 4.5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. ஆனால், ஒரு மரம் கூட இல்லை' என, கிராம சபை கூட்டத்தில், சரமாரியாக புகார் தெரிவிக்கப்பட்டது.கரியாம்பாளையம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் செய்யப்பட்ட பணிகள் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம், சுக்ரமணி கவுண்டன் புதூரில் நேற்று நடந்தது. ஊராட்சித் தலைவர் செல்வி மற்றும் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.சமூக தணிக்கை குறைபாடுகளை, வட்டார வள அலுவலர் சந்திரசேகர் வாசித்தார். 2019- -20ம் நிதி ஆண்டில் 30 பணிகள், 47 லட்சத்து, 17 ஆயிரத்து, 425 ரூபாயில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் உருவாக்கப்பட்ட சொத்துக்களின் பதிவேடு முழுமையாக இல்லை. அளவு பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளதை விட பல பணிகள், 50 முதல் 80 கன அடி குறைவாக உள்ளன.மரக்கன்றுகள் நடப்பட்டதாக குறிப்பிடப்பட்ட இடத்தில் அவை இல்லை. வருகைப் பதிவேட்டில் உள்ளதை விட கூடுதல் நபர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதை திருப்பி செலுத்த வேண்டும், என்பது உள்பட 13 குறைபாடுகளை அவர் தெரிவித்தார்.தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பேசுகையில், 'அரசு தினசரி சம்பளம், 273 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், 250 ரூபாய் தான் தருகின்றனர்.
ஆண்டுக்கு, 100 நாள் வேலை தர வேண்டும்; 50 நாட்கள் தான் வேலை தருகின்றனர். மரக்கன்று நட, நான்கு லட்சத்து 53 ஆயிரம் செலவிடப்பட்டதாக கணக்கு தெரிவித்துள்ளனர். ஆனால், ஒரு மரம் கூட இல்லை' என, சரமாரியாக புகார் தெரிவித்தனர்.மாயமானது எப்படி?அதிகாரிகள் பதிலளிக்கையில், 'மரக்கன்று நடப்பட்ட பாதையில், அத்திக்கடவு திட்டத்துக்காக குழிதோண்டி குழாய் பதிக்கும்போது, மரக்கன்றுகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. சில இடங்களில் கால்நடைகளால் மரக்கன்றுகள் சேதம் ஆகிவிட்டன. இந்த ஆண்டு அனைவருக்கும் தலா, 100 நாட்கள் வேலை தரப்படும். நிர்ணயிக்கப்பட்ட அளவு வேலை செய்தால் மட்டுமே 273 ரூபாய் வழங்கப்படும்.அதைவிட குறைவாக வேலை செய்தால், 250 ரூபாய் தான் வழங்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X