பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் கெடுபிடியால் நகரம் 'வெறிச்': திருவண்ணாமலையில் பக்தர்கள் அவதி

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: தீப திருவிழாவில், போலீஸ் கெடுபிடியால், திருவண்ணாமலையில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பக்தர்கள் அவதியடைந்தனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழாவை காண ஆண்டுதோறும், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர். இந்தாண்டு கொரோனா ஊரடங்கால், தீப திருவிழாவை காணவும், கிரிவலம்

திருவண்ணாமலை: தீப திருவிழாவில், போலீஸ் கெடுபிடியால், திருவண்ணாமலையில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பக்தர்கள் அவதியடைந்தனர்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழாவை காண ஆண்டுதோறும், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர். இந்தாண்டு கொரோனா ஊரடங்கால், தீப திருவிழாவை காணவும், கிரிவலம் செல்லவும், வெளியூர் பக்தர்கள் கடந்த, 17 மதியம், 1:00 முதல், வரும், 20 வரை திருவண்ணாமலை நகருக்கு வர தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டிருந்தது. போலீசார் மாவட்ட எல்லைகளிலேயே தடுத்து நிறுத்தி, பக்தர்களை திருப்பி அனுப்புகின்றனர். நேற்று முன்தினம் இரவு முதல், பலத்த மழை பெய்து வரும் நிலையில், உள்ளூரை சேர்ந்தவர்கள் வெளியில் செல்வதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். அத்தியாவசிய பணிக்கு மட்டும் செல்கின்றனர். ஆனால், அவர்களிடம் போலீசார் கெடுபிடி செய்கின்றனர். நகரம் வெறிச்சோடி உள்ள நிலையில், ஆங்காங்கே தெருக்களில் கம்பி தடுப்பு, பேரிகார்ட் அமைத்து, பொதுமக்களை வெளியே செல்ல முடியாமல் தடுத்து வருகின்றனர். திருவண்ணாமலை வழியாக, வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நகரினுள் அனுமதிக்கப்படாமல், புதிய பைபாஸ் சாலை வழியே அனுப்பப்படுகின்றன. சாதாரண நாட்களில் மக்கள் நடமாடும் அளவிற்கு கூட, விழா நாளில் அனுமதிக்கப்படாத நிலையில் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X