அப்ப ஒரு பேச்சு; இப்ப ஒரு பேச்சா? ஸ்டாலின் மீது பன்னீர் பாய்ச்சல்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அப்ப ஒரு பேச்சு; இப்ப ஒரு பேச்சா? ஸ்டாலின் மீது பன்னீர் பாய்ச்சல்!

Updated : நவ 21, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (16)
Share
சென்னை :'நீரால் சூழ்ந்துள்ள அனைத்து பயிர்களுக்கும், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:ஆட்சிக்கு வரும் முன் ஒரு நிலைப்பாடு, வந்த பின் ஒரு நிலைப்பாடு என்பதை, ஒவ்வொரு பிரச்னையிலும், தி.மு.க., அரசு எடுத்து வருகிறது. தற்போது பயிருக்கான நிவாரணம் வழங்குவதிலும், அதே நிலைபாட்டை எடுத்து,
அப்ப ஒரு பேச்சு; இப்ப ஒரு பேச்சா?  ஸ்டாலின்,பன்னீர் பாய்ச்சல்

சென்னை :'நீரால் சூழ்ந்துள்ள அனைத்து பயிர்களுக்கும், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
ஆட்சிக்கு வரும் முன் ஒரு நிலைப்பாடு, வந்த பின் ஒரு நிலைப்பாடு என்பதை, ஒவ்வொரு பிரச்னையிலும், தி.மு.க., அரசு எடுத்து வருகிறது. தற்போது பயிருக்கான நிவாரணம் வழங்குவதிலும், அதே நிலைபாட்டை எடுத்து, இரட்டை வேடம் போடுவதில், கைதேர்ந்த கட்சி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

கடந்த 2020 டிசம்பரில் பெய்த மழையின்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக, ஹெக்டேருக்கு அதாவது, 2.45 ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாயை அ.தி.மு.க., அரசு அறிவித்தது.அதை விமர்சனம் செய்த, அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர், பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, அறிக்கை விட்டார்.ஆனால், சமீபத்தில் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் கேட்டவர், ஆட்சிக்கு வந்த பின் ஏக்கருக்கு 8,000 ரூபாய் மட்டும் அறிவித்திருப்பது பொருத்தமற்றது. இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.எனவே, எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நீரால் சூழ்ந்துள்ள அனைத்து பயிர்களுக்கும், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X