துளிகள் செய்தி

தமிழ்நாடு

மாதேஸ்வரன் கோவிலில் கார்த்திகை மகா தீபம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள மாதேஸ்வரன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில், குட்டையூரில் மலை மீது மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, நேற்று மாதேஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.மாலை, 5:30 மணிக்கு, கோவில் முன்பு உள்ள கருட கம்பத்தில், பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள மாதேஸ்வரன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில், குட்டையூரில் மலை மீது மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, நேற்று மாதேஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.மாலை, 5:30 மணிக்கு, கோவில் முன்பு உள்ள கருட கம்பத்தில், பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்பு மலைமீது வெண்கல கொப்பரையில், 100 மீட்டர் காடா திரி வைத்து, நெய் ஊற்றி, கற்பூரங்களை அடுக்கி வைத்தனர்.கோவில் தலைமை அர்ச்சகர் மகேந்திரன் சிறப்பு பூஜை செய்தார். 6:00 மணிக்கு மகா தீபம் ஏற்றினார். இந்த தீபம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எரிந்துகொண்டிருக்கும். ஏராளமான பக்தர்கள் மகா தீபத்தை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X