பொது செய்தி

தமிழ்நாடு

கலவகுண்டா அணையிலிருந்து நீர் திறக்க உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை

Added : நவ 19, 2021
Share
Advertisement
வேலூர்: கலவகுண்டா அணையிலிருந்து, கூடுதல் தண்ணீர் திறக்க உள்ளதால், பாலாற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இது குறித்து, வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கலவகுண்டா அணையிலிருந்து தற்போது, 5,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு பாலாற்றில் சென்று

வேலூர்: கலவகுண்டா அணையிலிருந்து, கூடுதல் தண்ணீர் திறக்க உள்ளதால், பாலாற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


இது குறித்து, வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கலவகுண்டா அணையிலிருந்து தற்போது, 5,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு பாலாற்றில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேலும் கூடுதலாக, 10 ஆயிரம் கனஅடி நீரை திறக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த நீர் வேலூர் மாவட்டம், பொன்னை ஆற்றுக்கு வரும் போது, பொன்னை - சித்தூர் செல்லும் சாலை மற்றும் மேல்பாடி - கொண்டகுப்பம் பாலத்தின் மீது அதிகப்படியான தண்ணீர் செல்லும். பின் ராணிப்பேட்டை மாவட்டம், பாலாற்றில் கலந்து, 15 ஆயிரம் கன அடி நீரானது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக வங்கக்கடலில் கலக்க உள்ளதால், கரையோர மக்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X