பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது; கடந்து சென்ற மாணவர்கள் கயிறு கட்டி மீட்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதை பொருட்படுத்தாமல், பள்ளிக்கு சென்ற மாணவர்கள் சிக்கிக் கொண்டதால், கயிறு கட்டி அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், கொரட்டி அருகே பம்பாற்று ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. பாலத்தை கடந்து தான், தண்டுகானூர் கிராமத்திற்கு மக்கள் சென்று வந்தனர். நேற்று முன்தினம் இரவு கனமழை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதை பொருட்படுத்தாமல், பள்ளிக்கு சென்ற மாணவர்கள் சிக்கிக் கொண்டதால், கயிறு கட்டி அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், கொரட்டி அருகே பம்பாற்று ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. பாலத்தை கடந்து தான், தண்டுகானூர் கிராமத்திற்கு மக்கள் சென்று வந்தனர். நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு தரைப்பாலம் மூழ்கியது. திருப்பத்தூர் மாவட்டத்திற்கு, 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. இதனால் தண்டுகானூரை சேர்ந்த, 10, பிளஸ் 2 மாணவர்கள், 12 பேர் வெள்ளத்தை பொருட்படுத்தாமல், பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால், தரைப்பாலத்தின் மீது நடந்து சென்றனர். அப்போது, சில மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கி தரைப்பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், தரைப்பாலத்தின் ஒரு பகுதிக்கு லாரியை எடுத்து வந்து நிறுத்தி தாம்பு கயிற்றை கட்டி, மறுபக்கம் மறு கரையில் இருந்த டெலிபோன் கம்பத்தில் சேர்த்து கட்டினர். பின் மாணவர்கள் கயிற்றை பிடித்து தரைப்பாலத்தை கடந்து வந்தனர். கொரட்டி, திருப்பத்தூர் செல்ல வேறு பாதை இல்லாததால், தரைப்பாலத்தை உயர்த்தி கட்டித் தரும்படி அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X