போலீஸ் ஸ்டேஷனில் சிறுவர் கிளப் துவக்கம்| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷனில் சிறுவர் கிளப் துவக்கம்

Added : நவ 19, 2021
Share
சூலுார்: சூலுார் போலீஸ் ஸ்டேஷனில், சிறுவர், சிறுமியருக்கான, 'ஸ்போர்ட்ஸ் கிளப்' துவக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், சிறுவர், சிறுமியருக்கான, 'ஸ்போர்ட்ஸ் கிளப்' துவக்கப்பட்டு வருகிறது. சூலுார் போலீஸ் ஸ்டேஷனில், கிளப்பை திறந்து வைத்து, எஸ்.பி., செல்வ நாகரத்தினம் பேசுகையில், ''இந்த கிளப்பில் குழந்தைகள் விளையாட தேவையான விளையாட்டு

சூலுார்: சூலுார் போலீஸ் ஸ்டேஷனில், சிறுவர், சிறுமியருக்கான, 'ஸ்போர்ட்ஸ் கிளப்' துவக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், சிறுவர், சிறுமியருக்கான, 'ஸ்போர்ட்ஸ் கிளப்' துவக்கப்பட்டு வருகிறது. சூலுார் போலீஸ் ஸ்டேஷனில், கிளப்பை திறந்து வைத்து, எஸ்.பி., செல்வ நாகரத்தினம் பேசுகையில், ''இந்த கிளப்பில் குழந்தைகள் விளையாட தேவையான விளையாட்டு பொருட்கள்உள்ளன. பொது அறிவை வளர்த்துக் கொள்ள, நூலகத்தில் புத்தகங்கள் உள்ளன. உடற்பயிற்சி மற்றும் தற்காப்பு கலைகளும் இங்கு கற்றுத்தரப்படும். குழந்தைகள் உடலையும் உள்ளத்தையும் வலிமையாக்கி கொள்ள வேண்டும்,'' என்றார்.திரளான குழந்தைகள், பெற்றோர் பங்கேற்றனர். குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X