பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தொடர் மழை: 1.50 லட்சம் லாரிகள் நிறுத்தம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
சேலம்: ''தமிழகத்தில் பெய்யும் தொடர் மழையால், 1.50 லட்சம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன,'' என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு பொருளாளர் தனராஜ் தெரிவித்தார்.இது குறித்து அவர் நேற்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த நவ.,6 முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால்,

சேலம்: ''தமிழகத்தில் பெய்யும் தொடர் மழையால், 1.50 லட்சம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன,'' என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு பொருளாளர் தனராஜ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நேற்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த நவ.,6 முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால், அம்மாவட்டங்களுக்கான சரக்கு போக்குவரத்தில், 50 சதவீதம் சரிவை சந்தித்தது. தொடர்ந்து தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பெய்த மழையால், சரக்கு பரிமாற்றத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக சரக்குகளை ஏற்றும் குடோன்கள், கடைகளின் முன்னாள் மழை நீர் தேங்கி நிற்பதால், சரக்குகளை லாரிகளுக்கு எடுத்து வர முடியாத நிலையால், 50 ஆயிரம் லாரிகள் காத்திருக்கின்றன. கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு சரக்குகளை ஏற்றிய, 50 ஆயிரம் லாரிகள் சரக்குகளை இறக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர துறைமுகங்களில் சரக்கு பரிமாற்றம் தடை பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி, 50 ஆயிரம் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும், 1.50 லட்சம் லாரிகளின் இயக்கம் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து உப்பு, கருவாடு, உரங்கள், கோழித்தீவனங்கள், டெல்டா மாவட்டங்களில் இருந்து நெல், வடமாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு வரும் மளிகை பொருட்கள், கோதுமை, பருப்பு, தானிய வகைகள், சேலத்தில் இருந்து விற்பனைக்கு செல்லும் ஜவ்வரிசி, ஸ்டார்ச், கல்மாவு, இரும்பு கம்பிகள், மஞ்சள், ஈரோடு, கோவையில் இருந்து ஜவுளி ரகங்கள், நூல் ஆகியவற்றின் பரிமாற்றம், கடந்த, இரண்டு நாட்களாக முழுமையாக தடை பட்டுள்ளது. கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், லாரிகள், டிரைவர், நடத்துனர்கள் நலன் கருதி, கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு லாரிகளை இயக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X