மழையால் சிதைந்த சிறுமுகை சாலை: வாகனங்கள் செல்வதில் சிரமம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: சிறுமுகை சாலையில் குத்தாரிபாளையம் பிரிவில், பாலம் அமைத்து ரோடு போட, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் - -சிறுமுகை சாலையில், பவானிசாகர், சத்தியமங்கலம், கோபி பகுதிகளுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.குத்தாரிபாளையம் பிரிவு அருகே உள்ள பள்ளத்தில், மழை நீர் வழிந்தோடியதால், இச்சாலையில் பெரிய பள்ளம்



மேட்டுப்பாளையம்: சிறுமுகை சாலையில் குத்தாரிபாளையம் பிரிவில், பாலம் அமைத்து ரோடு போட, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் - -சிறுமுகை சாலையில், பவானிசாகர், சத்தியமங்கலம், கோபி பகுதிகளுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.குத்தாரிபாளையம் பிரிவு அருகே உள்ள பள்ளத்தில், மழை நீர் வழிந்தோடியதால், இச்சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் குறுக்கே, குழி தோண்டி குழாய் பதித்து, தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள், பல்வேறு அவதிக்கு உள்ளாகின்றனர். இச்சாலையில் புதிதாக பாலம் அமைத்து சாலை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் குமரன் கூறுகையில், ''சிறுமுகை சாலையில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள பள்ளத்தில், மழைநீர் ஓடுகிறது. குழாய் பதித்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.சாலையின் ஓரத்தில் வாகனங்கள் சென்றுவர, மாற்று சாலை போடப்பட்டுள்ளது. இதில், 25 லட்சம் ரூபாய் செலவில், சிறிய பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு, விரைவில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X