சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
சூலுார்: கிணற்றில் தவறி விழுந்த முதியவரை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.சூலுார் அடுத்த சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 92. இவர் நேற்று மதியம், மாரியம்மன் கோவில் அருகே உள்ள கிணற்றின் அருகே அமர்ந்திருந்தார். அப்போது, சுற்றுச்சுவர் இடிந்ததால், முதியவர் கிணற்றுக்குள் விழுந்தார்.அருகில் இருந்தவர்கள், சின்னியம்பாளையம் போலீஸ் செக்போஸ்ட்டில் தகவல்

சூலுார்: கிணற்றில் தவறி விழுந்த முதியவரை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.சூலுார் அடுத்த சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 92. இவர் நேற்று மதியம், மாரியம்மன் கோவில் அருகே உள்ள கிணற்றின் அருகே அமர்ந்திருந்தார். அப்போது, சுற்றுச்சுவர் இடிந்ததால், முதியவர் கிணற்றுக்குள் விழுந்தார்.அருகில் இருந்தவர்கள், சின்னியம்பாளையம் போலீஸ் செக்போஸ்ட்டில் தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சூலுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.நிலைய அலுவலர் கோபால் தலைமையில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குக்குள் இறங்கி, காயமடைந்த முதியவரை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். லேசான காயமடைந்த முதியவரை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X