அன்னுார்: குழாய் பதிப்புக்கு பிறகு சமன்படுத்தப்படாத சாலையில், தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன.அன்னூர் நகரில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மற்றும் அன்னூர், அவிநாசி பேரூராட்சி கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு குழிதோண்டி குழாய்கள் பதிக்கும் பணி நடந்தன.ஓதிமலை சாலையில் குழாய்கள் பதிக்கப்பட்ட இடத்தில், மண் நிரப்பி, உரிய அழுத்தத்துடன் சமன்படுத்தப்படவில்லை. இதனால் குழி ஏற்பட்டுள்ளது. தினமும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன.பொதுமக்கள் கூறுகையில், 'பழுதடைந்த சாலைகள் காரணமாக, அன்னுார் நகரில் தினமும் இருசக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. நான்கு நாட்களுக்கு முன் அரசு பஸ் விபத்துக்குள்ளானது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் குடிநீர் திட்ட ஒப்பந்ததாரரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. விபரீதம் நடக்கும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதாசிவம் கூறுகையில், ''நாளை (இன்று) அப்பகுதியில் சாலை சீரமைக்கும் பணி நடக்கும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE