சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

குளிர் கால பிரச்னைகளும், தீர்வுகளும்!

Updated : நவ 21, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
குளிர் காலத்தில் தோல் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும். தோல் மிகவும் வறட்சியாக இருக்கும். அரிப்பு அதிகமாக இருக்கும்.இதற்கு மிருதுவான சோப்பையே உபயோகிக்க வேண்டும். தோல் வெடிப்பு உள்ள இடத்தில் பெட்ரோலியம் ஜெல்லி சார்ந்த களிம்பை பூசலாம்.சுகாதாரம் இல்லாத உணவு விடுதிகளில் உணவு உண்ணும் போது வயிறு, குடல் சார்ந்த நோய்கள் வர வாய்ப்புண்டு.உதாரணம்: டிசென்ட்டிரி,
குளிர் கால பிரச்னைகள், தீர்வுகள்

குளிர் காலத்தில் தோல் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும். தோல் மிகவும் வறட்சியாக இருக்கும். அரிப்பு அதிகமாக இருக்கும்.இதற்கு மிருதுவான சோப்பையே உபயோகிக்க வேண்டும். தோல் வெடிப்பு உள்ள இடத்தில் பெட்ரோலியம் ஜெல்லி சார்ந்த களிம்பை பூசலாம்.சுகாதாரம் இல்லாத உணவு விடுதிகளில் உணவு உண்ணும் போது வயிறு, குடல் சார்ந்த நோய்கள் வர வாய்ப்புண்டு.


உதாரணம்:

டிசென்ட்டிரி, அமீபா சார்ந்த பேதி நோய், கிருமிகளினால் பாதிக்கப்பட்ட கெட்டு போன உணவால் உண்டாகும் வாந்தி, பேதி, வயிற்றுவலி மற்றும்காலரா, டைபாய்டு போன்ற நோய்களும் வர வாய்ப்புண்டு.பாக்டீரியா போன்ற கிருமிகள் குளிர்ந்த நிலையில் நன்றாக வளரும். ஆகையால் குளிர் காலத்தில் குளிர்ந்த பானங்கள் மற்றும் ஜஸ்கிரீம் போன்ற உணவுகளினாலும் உடல் நலம் பாதிக்கப்படலாம்.
வயிற்றுவலிமேற்கண்ட காரணங்களால் வயிற்றுவலி, வாந்தி மற்றும் பேதி சார்ந்த தொல்லைகள் வரலாம்.முடிந்த அளவிற்கு வீட்டிலேயே சமைத்த உணவை சாப்பிட வேண்டும். குளிர்ந்த பானங்கள், ஜஸ்கிரீம் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.கொதிக்க வைத்து, ஆற வைத்த தண்ணீரையே வீட்டிலேயும், வெளியிலேயும் குடிக்க வேண்டும். வெளியே செல்லும் போது, சூடான தண்ணீர் நிரப்பியபாட்டிலை அவசியம் எடுத்துச் செல்லவும்.குளிர் காலத்தில் ரத்தக் குழாய்கள் சற்று சுருங்க ஆரம்பிக்கும். கால்களில் ரத்தக் குழாய்கள் சற்று சுருங்குவதால், தொடர்ந்து நடக்க முடியாமல் கால்களில் வலி ஏற்படும். கால்களில் நிறமும் சற்று கருப்பாக மாறும். இவை நீரிழிவு நோயாளிக்கு வர வாய்ப்பு ஆதிகம்.


மார்பில் வலிமாரடைப்பு நோய் உள்ளவர்களுக்கு சற்று அதிகமான குளிரில் நடந்தாலோ அல்லது மாடிப்படியில் வேகமாக ஏறினாலோ மார்பில் வலி உண்டாகலாம்.நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல் சற்று நேரம் காலையிலும், மாலையிலும்நடைப்பயிற்சி செய்து வரலாம்.கால்களுக்கு முடிந்த வரை 'சாக்ஸ்' அணிந்து கால்களை சற்று வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். மாரடைப்பு நோய் உள்ளவர்கள் குளிர்காலத்தில் மெதுவாக நடப்பதே சிறந்தது.


எலி ஜுரம்வெளியில் செல்லும் போது மாரடைப்பு வலிக்கு தேவையான மாத்திரையான, 'ஐசோடிரில்' கைவசம் எடுத்துக் செல்வது மிகவும் அவசியம்.குளிர் காலத்தில் பசி சற்று அதிகம் எடுக்கும். ஆகையால் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு எடை கூட வாய்ப்புண்டு. உணவில் கவனம் தேவை. 'தைராய்டு' குறைவாக உள்ள நோயாளிகளால் அதிக குளிரை தாங்கிக் கொள்ள முடியாது.தாகம் சற்று குறையும். அதனால் உடலில் நீர் வறட்சி ஏற்படும். உடலில்சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். தொடர்ந்து அசுத்த நீரில் கால்களை வைத்திருந்தால் எலி ஜுரம் வர வாய்ப்பு அதிகரிக்கும். கொசுக்கடியால் மலேரியாமற்றும் டெங்கு வர வாய்ப்புகளும் அதிகம்.உடல் சூட்டை சற்று அதிகரிக்கக் கூடிய, கம்பளி போன்ற ஆடைகளை அணியலாம். வெங்காயம், பீட்ருட், தேவையான காய்கறிகள், பச்சைக் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.பழங்களில் மாதுளம் மற்றும் கொய்யா மிகவும் தேவையானது. பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற கொட்டை வகைகள் உகந்தது.


பக்கவாதம்குளிர் காலத்தில், 'சூப்' ஒரு சிறந்த உணவு. எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 9 வயது தாண்டியவர்களுக்கு 'நிமோனியா' சளி காய்ச்சல் வராமல் தடுக்க ஒரே ஒரு தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டால் பல ஆண்டுகளுக்கு தொல்லையின்றி இருக்க முடியும். இதில் பக்கவிளைவுகள் ஏதும் கிடையாது.ஆஸ்துமா, அடிக்கடி இருமல், சளி தொல்லை உள்ளவர்கள், ப்ளூ காய்ச்சல் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வது நல்லது. இதை வருடத்திற்கு ஓரு முறை போடவேண்டும்.குளிர்காலத்தில் தசை மற்றும் மூட்டுகள் இறுகி விடும். அதனால் வலியும் ஏற்படும். சிறிது நேர நடைப்பயிற்சி தினமும் செய்வது மிகவும் அவசியம். உதறுவாதம், பக்கவாதம் போன்ற நோய் உள்ளவர்கள் தினமும் உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும்.
முடிந்தால் இயன்முறை சிகிச்சை மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.குளிர் காலத்தில் மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் குளிர் காலத்தையும் ஆனந்தமாய் அனுபவித்து நலமாய் வாழ முடியும்!

தொடர்புக்கு: பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன்

முதியோர் நல மருத்துவர், சென்னை
இ-மெயில்: dr_v_s_natarajan@yahoo.com

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram sadagopan - Bengaluru,இந்தியா
21-நவ-202115:36:26 IST Report Abuse
sundaram sadagopan டாக்டர் நடராஜனுக்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X