ரயில்வே டிவிஷனல் மேலாளர் துடியலுார் அருகே ஆய்வு

Added : நவ 19, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான ரோட்டை தெற்கு ரயில்வே டிவிஷனல் மேலாளர் கவுதம் சீனிவாஸ், கோவை எம்.பி.,நடராஜன் ஆய்வு செய்தனர்.துடியலுார் - வெள்ளக்கிணறு ரோட்டில், ரயில்வே கேட்டில் இருந்து ஸ்டேன்ஸ் காலனி செல்லும் தார்சாலை, 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது, மிகவும் பழுதடைந்துள்ளது.நேற்று தெற்கு ரயில்வே டிவிஷனல் மேலாளர் கவுதம் சீனிவாஸ்

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான ரோட்டை தெற்கு ரயில்வே டிவிஷனல் மேலாளர் கவுதம் சீனிவாஸ், கோவை எம்.பி.,நடராஜன் ஆய்வு செய்தனர்.துடியலுார் - வெள்ளக்கிணறு ரோட்டில், ரயில்வே கேட்டில் இருந்து ஸ்டேன்ஸ் காலனி செல்லும் தார்சாலை, 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது, மிகவும் பழுதடைந்துள்ளது.நேற்று தெற்கு ரயில்வே டிவிஷனல் மேலாளர் கவுதம் சீனிவாஸ் மற்றும் ரயில்வே இன்ஜினியர் உள்ளிட்ட குழுவினர் பழுதடைந்த சாலைகளைபார்வையிட்டனர்.அசோகபுரம் ஊராட்சி, கணபதி நகர் வழியாக செல்லும் ரோடும், 10 லட்சம் ரூபாய் செலவில் செப்பனிடப்படும் என, டிவிஷனல் மேலாளர் கவுதம் சீனிவாஸ் தெரிவித்தார்.தற்போது, துடியலுார் ரயில்வே ஸ்டேஷனில் தினமும் நான்கு முறை பாசஞ்சர் நின்று, ரயில் பயணிகளை ஏற்றி, இறக்கி வருகிறது. இதை, எட்டு முறையாக அதிகரிக்க வேண்டும்.நடைமேடை அகலப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X