செய்தி செய்தி

தமிழ்நாடு

நாளை 70 இடங்களில் தடுப்பூசி முகாம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்: அன்னூர் ஒன்றியத்தில், நாளை (21ம் தேதி) 70 இடங்களில், தடுப்பூசி முகாம் நடக்கிறது.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், கோவிந்தநாயக்கன் பாளையத்தில் இருவருக்கு, கீரணத்தம் ஊராட்சியில் ஒருவருக்கு, கோவில்பாளையம் பேரூராட்சியில் ஒருவருக்கு என நான்கு பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.இதையடுத்து நான்கு பேரும், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி

கோவில்பாளையம்: அன்னூர் ஒன்றியத்தில், நாளை (21ம் தேதி) 70 இடங்களில், தடுப்பூசி முகாம் நடக்கிறது.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், கோவிந்தநாயக்கன் பாளையத்தில் இருவருக்கு, கீரணத்தம் ஊராட்சியில் ஒருவருக்கு, கோவில்பாளையம் பேரூராட்சியில் ஒருவருக்கு என நான்கு பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.இதையடுத்து நான்கு பேரும், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்பில் இருந்தவர்களுக்கு இன்று தொற்றுப் பரிசோதனை செய்யப்படுகிறது.அன்னூர் ஒன்றியத்தில், நேற்று ஒருவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. 260 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 138 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.வரும் 21ம் தேதி அன்னுார் ஒன்றியத்தில், 70 இடங்களில், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை தடுப்பூசி முகாம் நடக்கிறது. 'தடுப்பூசி போடாதவர்கள் முகாமில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்' என, வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X