பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பை பாக்கெட்டில் அனுப்ப கோரிக்கை

Added : நவ 19, 2021
Share
Advertisement
சென்னை:பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களை தனித்தனியாக அனுப்பாமல், அனைத்தையும் துணி பையில் போட்டு பாக்கெட் செய்து, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யுமாறு, அரசுக்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசு, வரும் பொங்கலுக்கு 2.15 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்து உள்ளது. அதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை,

சென்னை:பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களை தனித்தனியாக அனுப்பாமல், அனைத்தையும் துணி பையில் போட்டு பாக்கெட் செய்து, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யுமாறு, அரசுக்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு, வரும் பொங்கலுக்கு 2.15 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்து உள்ளது. அதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசி பருப்பு, நெய், மஞ்சள்துாள், மிளகாய் துாய், மல்லி துாள், கடுகு, சீரகம்,மிளகு, புளி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய பொருட்களுடன் துணி பையும் இடம்பெற்றுள்ளன.மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் துணி பையில் பாக்கெட் செய்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்புமாறு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:ரேஷன் கடைகளுக்கு வழக்கமான அரிசி, சர்க்கரை போன்றவையே சரியான எடையில் அனுப்புவதில்லை. கொரோனா நிவாரணமாக அரசு, ஜூனில் 14 வகை மளிகை பொருட்களை வழங்கியது. அதில் துணி பையும் இடம்பெற்றிருந்தது.

ஆனால், மளிகை தொகுப்பில் இடம்பெற்றிருந்த பொருட்கள் தனித்தனியே கடைகளுக்கு அனுப்பப்பட்டன. அவற்றை எடுத்து, ஒவ்வொரு கார்டுதாரருக்கும் துணி பையில் போட்டு தருமாறு, அதிகாரிகள் கூறினர்.இதனால், ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டது. மேலும், பல பொருட்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.இதனால், ஊழியர்களுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டது.

இதே பிரச்னை, பொங்கல் பரிசு வழங்கும் போது ஏற்படக்கூடாது.எனவே, பரிசு தொகுப்பில் உள்ள பொருட்கள் அனைத்தையும், நுகர்பொருள் வாணிப கழகமே துணி பையில் போட்டு, அதை யாரும் எடுக்காதபடி தைத்து, கார்டுதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கடைகளுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X