மணல் சிற்ப போட்டியில் பள்ளி மாணவி முதலிடம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 'சி' பிரிவில் படிப்பவர் மாணவி கிருத்திகா. ஓவியம் வரைதல் மற்றும் சிற்பம் செதுக்குதல் போட்டிகளில் பள்ளி அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும், வருவாய் மாவட்ட அளவிலும் முதல் பரிசுகளை குவித்து வந்தார்.கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த போட்டியில், மாநில அளவில் முதல் பரிசும், தேசிய அளவில் மூன்றாம் இடத்தையும் பிடித்து

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 'சி' பிரிவில் படிப்பவர் மாணவி கிருத்திகா.
ஓவியம் வரைதல் மற்றும் சிற்பம் செதுக்குதல் போட்டிகளில் பள்ளி அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும், வருவாய் மாவட்ட அளவிலும் முதல் பரிசுகளை குவித்து வந்தார்.கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த போட்டியில், மாநில அளவில் முதல் பரிசும், தேசிய அளவில் மூன்றாம் இடத்தையும் பிடித்து பாராட்டு பெற்றார். நடப்பு ஆண்டிலும், கலைத்திருவிழா போட்டிகள், சேலம் சோனா பொறியியல் கல்லுாரியில் நடந்தது. இதில், மாணவி கிருத்திகா, காண்கலைகள் முப்பரிமாண, மணல் சிற்ப போட்டியில் பங்கேற்று மீண்டும் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.மாணவியை, தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஓவிய ஆசிரியர்கள் கவுசல்யா, ராஜலட்சுமி ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X