சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் புகாரில் கைதான டாக்டர்கள் பணி நீக்கம்

Added : நவ 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:பாலியல் புகாரில் கைதான ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர், கொரோனா பணியின் போது, தனிமைப்படுத்துதலுக்காக, தி.நகரில் உள்ள, தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். அதே மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்வெற்றிசெல்வன், 35, பெண் டாக்டரை பலாத்காரம்

சென்னை:பாலியல் புகாரில் கைதான ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர், கொரோனா பணியின் போது, தனிமைப்படுத்துதலுக்காக, தி.நகரில் உள்ள, தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். அதே மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்வெற்றிசெல்வன், 35, பெண் டாக்டரை பலாத்காரம் செய்துள்ளார்.
அதேபோல, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மற்றொரு பெண் டாக்டரும், அதே ஓட்டலில் தனிமையில் இருந்தபோது, டாக்டர் மோகன்ராஜ், 28, என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்து, இரண்டு பெண் டாக்டர்களும் அளித்த புகார் அடிப்படையில், வெற்றிசெல்வன், மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இரண்டு டாக்டர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து, மருத்துவகல்வி இயக்குனர் நாராயணபாபு கூறுகையில், ''பாலியல் புகாரில் கைதான இரண்டு டாக்டர்களும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தனர். ''புகாரில் அவர்கள் மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளோம்,'' என்றார்.'இரண்டு டாக்டர்களும், ஐந்தாண்டுகளுக்கு டாக்டர் பணி மேற்கொள்ள தடை விதிக்கப்படலாம்' என்றும் தமிழக மருத்துவ கவுன்சில் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NACHI - CHENNAI,இந்தியா
20-நவ-202109:49:26 IST Report Abuse
NACHI If these doctors enjoyed the benefits of reservation, the entire money to educate them shall be recovered and their wards shall not be given any reservation benefits. Their medical degree shall be cancelled.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X