சென்னை:செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், 'ஆதிச்சநல்லுார் தாமிரபரணி நாகரிகம்' என்ற, தொல்லியல் ஆவணப்படம், நிறுவன வலைதளத்தில் வெளியிடப் பட்டு உள்ளது.
நாட்டில் முதன் முதலாக, துாத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுாரில் தான் அகழாய்வு நடந்தது. உலகின் ஆதி மனிதர்களான ஆப்ரிக்க பழங்குடிகளின் மரபியல் கூறுகளுக்கும், ஆதிச்சநல்லுாரில் வாழ்ந்த மனிதர்களின் மரபியல் கூறுகளுக்கும் தொடர்பு உள்ளதை, அறிவியல் அறிஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். தற்போது, மத்திய அரசு சார்பில், அங்கு கள அருங்காட்சியகம் அமைய உள்ளது. மேலும், அங்கு அகழாய்வும் நடைபெறுகிறது.
இந்நிலையில், அங்கு அகழாய்வு செய்யப்பட்ட விதம், அதில் கிடைத்த தொல்பொருட்கள், அதற்கும் தமிழர்களின் நாகரிக பழமைக்குமான தொடர்பு உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில், 'ஆதிச்சநல்லுார்- தாமிரபரணி நாகரிகம்' என்ற பெயரில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மணி நேர ஆவணப்படம், இரண்டு பாகங்களாக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வலைதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது. ஆவணப்படத்தை ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கியுள்ளார்.ஆவணப்படத்தை காண https://www.cict.in/veliyeedugal_kanoli-padangal.php என்ற இணைப்பை பயன்படுத்தலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE