கை உடைந்த கிருஷ்ணர் சிலை: கட்டுப்போட்டு தந்த மருத்துவர்!

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் கோவில் பூஜாரி ஒருவர் அபிஷேகம் செய்யும் போது உடைத்துவிட்ட கிருஷ்ணர் சிலையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் படி அழுதார். அவ்வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.ஆக்ராவின் அர்ஜுன் நகரில் உள்ள பத்வாரி கோவிலில் கடந்த 30 ஆண்டுகளாக பூஜாரியாக இருப்பவர் லேக் சிங். இவர் இன்று காலை கோயிலில் சுவாமி சிலைகளுக்கு

ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் கோவில் பூஜாரி ஒருவர் அபிஷேகம் செய்யும் போது உடைத்துவிட்ட கிருஷ்ணர் சிலையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் படி அழுதார். அவ்வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.latest tamil news
ஆக்ராவின் அர்ஜுன் நகரில் உள்ள பத்வாரி கோவிலில் கடந்த 30 ஆண்டுகளாக பூஜாரியாக இருப்பவர் லேக் சிங். இவர் இன்று காலை கோயிலில் சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்துள்ளார்.
அப்போது தவறுதலாக கைப்பட்டு கிருஷ்ணரின் விக்ரகம் கீழே விழுந்து, அதன் ஒரு கை உடைந்துள்ளது. இதனால் பதறிப்போன பூஜாரி லேக் சிங், கிருஷ்ணர் விக்ரகத்தை பட்டுத் துணியில் சுற்றி எடுத்துக்கொண்டு ஆக்ரா மாவட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு அழுதபடி நின்றிருந்தவரிடம் மருத்துவமனை ஊழியர் என்ன விஷயம் என கேட்டுள்ளார். அதற்கு கிருஷ்ணரின் விக்ரகத்தை காட்டி நடந்தவற்றை கூறி கட்டுப்போடும் படி கேட்டுள்ளார். அவர்கள் சிலை செய்யும் இடத்திற்கு செல்லும் படி கூறியுள்ளனர். ஆனால் அங்கிருந்து நகராமல் தலையை முட்டிக்கொண்டு கதறி அழுதார்.


latest tamil news
அவரது உணர்வை காயப்படுத்த விரும்பாத தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் குமார் அகர்வால், ஸ்ரீ கிருஷ்ணா என்ற பெயரில் சீட்டு பதிந்து கட்டுப்போட்டு தந்துள்ளார். இச்சம்பவத்தை மருத்துவமனைக்கு வந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-202118:53:16 IST Report Abuse
சம்பத் குமார் 1). உலகமே கண்ணுக்கு தெரியாத ஒரு நூல் இழையில் தான் இயங்குகிறது.2)..அது அன்பு என்கிற அந்த நூல் இழைதான்.3). அன்பை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக வெவ்வேறு செயல் மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.4). இவரது நட்பை கவனித்தால் கிருஷ்ணன் அர்ச்சுனன் அன்பு போன்று உள்ளது.5). எல்லாம் அவன் செயல். 6). அன்பே சிவம். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
20-நவ-202115:01:42 IST Report Abuse
r.sundaram இது தினமும் பூஜை செய்து பழகியர்வர் களுக்குத்தான் இதன் அருமை புரியும். அவர் அந்த சிலையை நகமும் சதையும் உயிரும் உள்ள ஒரு மனிதனாகவே பார்க்கிறார். அவர் மனதில் உள்ள பக்தி அப்படிப்பட்டது. இந்த மாதிரி பக்தி கோடியில் ஒருவருக்கு கூட வராது. இதெல்லாம் இங்குள்ளவர்களுக்கு சொன்னால் புரியாது. இது அனுபவம், அனுபவ பட்டால்தான் தெரியும். கிருஷ்ணா கிருஷ்ணா, கோவிந்தா கோவிந்தா சரணம். இந்த மாதிரி அனுபவத்தை எனக்கும் அருளுங்களேன்.
Rate this:
Cancel
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
20-நவ-202114:31:08 IST Report Abuse
Venkat few occasions where educated person loses common sense
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X