அரசியல் செய்தி

தமிழ்நாடு

சூர்யா, ஜோதிகா மீது போலீசில் பா.ம.க., புகார்

Added : நவ 19, 2021
Share
Advertisement
சென்னை:நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் பா.ம.க.,வினர் புகார் அளித்தனர்.சூர்யா நடிப்பில் வெளியான, ஜெய்பீம் திரைப்படம், வன்னியர் -- இருளர் சமுதாயம் இடையே கலவரத்தை துாண்டும் விதமாக அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, பா.ம.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பா.ம.க., மாநில நிர்வாகிகள், சென்னை அண்ணா

சென்னை:நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் பா.ம.க.,வினர் புகார் அளித்தனர்.
சூர்யா நடிப்பில் வெளியான, ஜெய்பீம் திரைப்படம், வன்னியர் -- இருளர் சமுதாயம் இடையே கலவரத்தை துாண்டும் விதமாக அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, பா.ம.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பா.ம.க., மாநில நிர்வாகிகள், சென்னை அண்ணா நகர் உதவி கமிஷனரிடம் புகார் அளித்தனர்.
அதில், அவர்கள் கூறியுள்ளதாவது:ஜெய்பீம் திரைப்படத்தில், வன்னியர் சமூகம் குறித்த அவதுாறான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வன்னிய சமூகத்தினரின் எண்ணங்களை புண்படுத்தும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளன.ஜாதி வெறியை துாண்டும் விதமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, படத்தின் இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா, நடிகர் சூர்யா ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


'ரூ.1 லட்சம் மணியார்டர்''

சூர்யா வருத்தம் தெரிவித்தால் 1 லட்சம் ரூபாய் மணியார்டர் செய்வேன்' என பா.ம.க., மாநில பொதுச்செயலர் கே.என்.சேகர் கூறினார்.ஜெய்பீம் திரைப்படத்தை தடை செய்யக் கோரி பா.ம.க.,வினர், புளியந்தோப்பு காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். அம்பத்துார் துணை கமிஷனர் அலுவலகத்தில் பா.ம.க. மாநில துணை பொதுசெயலர் கே.என்.சேகர் புகார் மனு அளித்தார்.
அவர் அளித்த பேட்டிசூர்யா, ஞானவேல், ரஞ்சித், கண்ணன் இவர்கள் யார்? எங்களது சமுதாயத்தை இழிவாக காட்டுவதற்கு இவர்களுக்கு உரிமை கொடுத்தது யார்?சூர்யா வீட்டிற்கு முன் ஐந்து காவலர்களை நிறுத்தினால் அமைதி வந்துவிடுமா? சிவகுமார் குடும்பத்தில் இருந்து அடுத்த படம் வராதா?
தமிழகத்தில் நிலையான ஆட்சி வேண்டுமென்றால், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு அமைதியாக வேண்டும் என நினைத்தால், சூர்யா வருத்தம் தெரிவிக்க வேண்டும். வருத்தம் தெரிவித்த ஒரு மணி நேரத்தில், 1 லட்சம் ரூபாய் நான் 'மணியார்டர்' செய்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ம.க. மாநில துணை பொதுச் செயலர் பிரின்ஸ், திருச்சி எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகாரில், 'ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையில் படம் எடுத்துள்ள, ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X