மழை, பனியால் மூச்சு பிரச்னை முதலில் டாக்டரை பார்க்கணும்| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

மழை, பனியால் மூச்சு பிரச்னை முதலில் டாக்டரை பார்க்கணும்

Added : நவ 19, 2021
Share
கோவை: ஆஸ்துமா, சி.ஓ.பி.டி., போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனடியாக மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டுமென, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.வடகிழக்கு மழைக்காலம் என்பதால், சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த மழை சீசனில், ஆஸ்துமா, நுரையீரல் அடைப்பு நோய் (சி.ஓ.பி.டி.,) அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவர்களிடம் சிகிச்சை பெற

கோவை: ஆஸ்துமா, சி.ஓ.பி.டி., போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனடியாக மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டுமென, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.வடகிழக்கு மழைக்காலம் என்பதால், சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த மழை சீசனில், ஆஸ்துமா, நுரையீரல் அடைப்பு நோய் (சி.ஓ.பி.டி.,) அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டும்.இது குறித்து, கோவை அரசு மருத்துவமனையின் நுரையீரல் துறைத்தலைவர் கீர்த்திவாசன் கூறுகையில், ''குளிர்காலங்களில் வைரஸ் நோய் தொற்று, இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். இல்லையெனில், ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.ஆரம்ப நிலையில் நோயின் தன்மையை கண்டறிந்து விட்டால், பாதிப்பு குறைவாக இருக்கும். நுரையீரல் நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க, தேவையான மருந்து இருப்பு உள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X