அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாரதிராஜாவுக்கு அன்புமணி கேள்வி

Added : நவ 19, 2021
Share
Advertisement
சென்னை:'ஜெய் பீம் படத்தில் குறிப்பிட்ட காட்சியில் அக்னி குண்டம் இடம் பெற்ற காலண்டருக்கு பதில், தேவர் படம் பொறித்த காலண்டர் இருந்தால் சும்மா இருப்பீர்களா' என, இயக்குனர் பாரதிராஜாவுக்கு, அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.ஜெய் பீம் பட விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குனர் பாரதிராஜா பேசியிருந்தார். இது குறித்து, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணிக்கும் கடிதம்

சென்னை:'ஜெய் பீம் படத்தில் குறிப்பிட்ட காட்சியில் அக்னி குண்டம் இடம் பெற்ற காலண்டருக்கு பதில், தேவர் படம் பொறித்த காலண்டர் இருந்தால் சும்மா இருப்பீர்களா' என, இயக்குனர் பாரதிராஜாவுக்கு, அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெய் பீம் பட விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குனர் பாரதிராஜா பேசியிருந்தார். இது குறித்து, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணிக்கும் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு அன்புமணி அளித்துள்ள பதில்:ஜெய் பீம் பட சர்ச்சை, ஜாதி, அரசியல் பிரச்னை அல்ல. அது ஒரு சமூக பிரச்னை. இதில் திரைத் துரையினருக்கும் மிகப்பெரிய புரிதல் இல்லை என்பது எனக்கு வருத்தம் தருகிறது.குறிப்பிட்ட காட்சியில் அக்னி குண்டம் படம் அல்லாமல், அதில் தேவர் படம் இருந்தால், நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருந்திருக்குமா?
படைப்பு சுதந்திரம் என சும்மா இருந்து இருப்பீர்களா? இதில் யார் இருந்திருந்தாலும், நாங்கள் குரல் கொடுத்திருப்போம். படைப்பு சுதந்திரம் சூர்யாவுக்கு மட்டும் தானா? இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்வாழ்க்கையை, விஜய் சேதுபதி நடிக்க படமாக்க முனைந்தபோது, அந்த படைப்பு சுதந்திரம் மறுக்கப்பட்டது ஏன்; தாங்கள் தானே கண்டனக் கடிதத்தை எழுதியிருந்தீர்கள்.

சமீபத்தில் வெளியான, 'பேமிலி மேன் - 2' தொடர் தடை செய்யப்பட வேண்டுமென எச்சரிக்கை விடுத்தீர்கள். அப்போது எங்கே போனது உங்கள் படைப்பு சுதந்திரம். வன்னியரின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக, படக் குழுவினர் வருத்தம் தெரிவித்திருந்தால், இவ்விவகாரம் அன்றே முடிவுக்கு வந்திருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X