சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தியாகதுருகம் பகுதியில் 114 வீடுகள் சேதம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : தியாகதுருகம் ஒன்றியத்தில் பெய்த கனமழை காரணமாக 114 வீடுகள் சேதமடைந்துள்ளன.தியாகதுருகம் ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டியது. ஏரி, குளங்கள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதியை சூழ்ந்தது.இதன் காரணமாக பல கிராமங்களில் சுவர் இடிந்தும், கூரைகள் சரிந்தும் வீடுகள் சேதமடைந்தன. அதிகபட்சமாக வடபூண்டி கிராமத்தில் 32

தியாகதுருகம் : தியாகதுருகம் ஒன்றியத்தில் பெய்த கனமழை காரணமாக 114 வீடுகள் சேதமடைந்துள்ளன.

தியாகதுருகம் ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டியது. ஏரி, குளங்கள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதியை சூழ்ந்தது.இதன் காரணமாக பல கிராமங்களில் சுவர் இடிந்தும், கூரைகள் சரிந்தும் வீடுகள் சேதமடைந்தன.

அதிகபட்சமாக வடபூண்டி கிராமத்தில் 32 வீடுகள், பல்லகச்சேரி, சின்னமாம்பட்டு, கணங்கூர் தலா 9, பீளமேடு 8, சித்தலுார் 7, கொங்கராயபாளையம், வேளாக்குறிச்சி தலா 6, சிறுநாகலுார், பானையங்கால் 4, சித்தாத்துார், நாகலுார், மடம் தலா 3, சாத்தனுார், வரஞ்சரம், ஈய்யனுார், விளக்கூர் தலா 2, மேல்விழி, புது உச்சிமேடு, கூந்தனுார் தலா 1 வீடுகள் சேதமடைந்தன.

தாழ்வான குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளதால் இதன் எண்ணிக்கை அதிகரிக்க கூடும்.பி.டி.ஓ., க்கள் செந்தில் முருகன், இந்திராணி தலைமையில் இடிந்த வீடுகளின் கணக்கெடுப்புப் பணி நடந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X