ஏரி கோடி வாய்க்கால் உடைப்பு 300 ஏக்கர் நெற்பயிர் நீரில் முழ்கியது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரி கோடி வாய்க்கால் உடைப்பு 300 ஏக்கர் நெற்பயிர் நீரில் முழ்கியது

Added : நவ 19, 2021
Share
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே எஸ்.குளத்துார் ஏரி கோடி வாய்க்கால் உடைந்ததால் 300 ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் முழ்கியது.சங்கராபுரம் பகுதியில் நேற்று முன் தினம் 18ம் தேதி காலை முதல் இரவு வரை தொடர்ந்து கன மழை பெய்தது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரி கோடி வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு அருகாமையில் இருந்த ஆரூர், வடசெரளூர்

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே எஸ்.குளத்துார் ஏரி கோடி வாய்க்கால் உடைந்ததால் 300 ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் முழ்கியது.

சங்கராபுரம் பகுதியில் நேற்று முன் தினம் 18ம் தேதி காலை முதல் இரவு வரை தொடர்ந்து கன மழை பெய்தது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரி கோடி வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு அருகாமையில் இருந்த ஆரூர், வடசெரளூர் கிராமங்களில் உள்ள 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.ஏரி உடைப்பு குறித்து தகவலறிந்த சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் திருமலை ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X