சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரம் அருகே இரு வேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவர் பலி

Added : நவ 19, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே இரு வேறு இடங்களில் ஏரி கோடி வாய்காலில் இறங்கிய இருவர் நீரில் மூழ்கி இறந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமவராவதி, கங்கனபட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா, 42; இவர் கடந்த வாரம் சங்கராபுரம் அடுத்த முக்கனுார் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்திருந்தார்.நேற்று முன்தினம் கடுவனுார் சென்று இரவு முக்கனுார் செல்ல ஏரி கோடி வாய்க்காலில்

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே இரு வேறு இடங்களில் ஏரி கோடி வாய்காலில் இறங்கிய இருவர் நீரில் மூழ்கி இறந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமவராவதி, கங்கனபட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா, 42; இவர் கடந்த வாரம் சங்கராபுரம் அடுத்த முக்கனுார் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்திருந்தார்.நேற்று முன்தினம் கடுவனுார் சென்று இரவு முக்கனுார் செல்ல ஏரி கோடி வாய்க்காலில் இறங்கினார். அப்போது நீரில் அடித்துச் செல்லப்பட்டார். நேற்று காலை ஊர் பொதுமக்கள் சுப்பையா உடலை மீட்டனர்.

மற்றொரு சம்பவம்

சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 50; இவர் நேற்று காலை மெயின்ரோடில் இருந்து வீட்டிற்குச் செல்ல ஏரி கோடி வாய்க்காலில் இறங்கினார். அப்போது நீர் வரத்து அதிகரித்ததால், அடித்துச் செல்லப்பட்டார்சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆறுமுகம் உடலை மீட்டனர். சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X