சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் போராட்டம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோவை: மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை அரசு கலைக் கல்லுாரியில் பேராசிரியர் ஒருவர் மாணவியரிடம் தவறாக நடந்ததாக மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் மனு அளித்தனர். இந்நிலையில், பேராசிரியரை கண்டித்து கோவை அரசு கலைக்கல்லூரி முன், இந்திய மாணவர் சங்கம் மற்றும் அரசு

கோவை: மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை அரசு கலைக் கல்லுாரியில் பேராசிரியர் ஒருவர் மாணவியரிடம் தவறாக நடந்ததாக மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் மனு அளித்தனர். இந்நிலையில், பேராசிரியரை கண்டித்து கோவை அரசு கலைக்கல்லூரி முன், இந்திய மாணவர் சங்கம் மற்றும் அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.புகார் கூறப்பட்ட கல்லூரி பேராசிரியர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளிடம் தவறாக நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது போன்ற பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்யாமல், பணி நீக்கம் செய்ய வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொந்தளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X