பட்டா மாற்றம் சிறப்பு முகாம் 17 பயனாளிகளுக்கு சான்றிதழ்| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

பட்டா மாற்றம் சிறப்பு முகாம் 17 பயனாளிகளுக்கு சான்றிதழ்

Added : நவ 19, 2021
Share
கோத்தகிரி: கோத்தகிரி தேனாடு கிராமத்தில், பட்டா மாற்றம் குறித்த சிறப்பு முகாமில், 17 பயனாளிகளுக்கு, உடனுக்குடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.முகாமுக்கு, கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன் தலைமை வகித்தார். துணை தாசில்தார் சுமதி, ஆர்.ஐ., வேல்மயில், வி.ஏ.ஓ., திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேனாடு ஊராட்சிக்கு உட்பட்ட, 15 குக்கிராமங்களில் இருந்து, பொதுமக்கள் பட்டா மாறுதல், பெயர்

கோத்தகிரி: கோத்தகிரி தேனாடு கிராமத்தில், பட்டா மாற்றம் குறித்த சிறப்பு முகாமில், 17 பயனாளிகளுக்கு, உடனுக்குடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.முகாமுக்கு, கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன் தலைமை வகித்தார். துணை தாசில்தார் சுமதி, ஆர்.ஐ., வேல்மயில், வி.ஏ.ஓ., திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேனாடு ஊராட்சிக்கு உட்பட்ட, 15 குக்கிராமங்களில் இருந்து, பொதுமக்கள் பட்டா மாறுதல், பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கம் உள்ளிட்ட மனுக்கள் அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து, பெறப்பட்ட மனுக்கள் ஆராயப்பட்டன. மொத்தம், பெறப்பட்ட, 20 மனுக்களில், 17 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. மீதமுள்ள, 3 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X